தீபாவளிப் பண்டிகை: நவம்பர் 6, 7 தேதிகளில் சாலைக் கட்டணத்தில் 50% கழிவு

5 நவம்பர் 2026, 4:47 AM
தீபாவளிப் பண்டிகை: நவம்பர் 6, 7 தேதிகளில்  சாலைக் கட்டணத்தில் 50% கழிவு

கோலாலம்பூர், நவ 5 : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6, 7-ஆம் தேதிகளில் சாலைக் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவு வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்தது.

இந்த கழிவு சலுகை நாளை நள்ளிரவு (நவம்பர் 6, வெள்ளிக்கிழமை) தொடங்கி, சனிக்கிழமை (நவம்பர் 7) இரவு 11:59 மணிக்கு நிறைவடையும் என பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

இந்த கழிவுத் திட்டத்திற்காக நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட வேண்டிய சுமார் RM20.11 மில்லியன் நிதியை அரசாங்கம் முழுமையாக ஏற்கும்.

இந்தச் சலுகை அனைத்து சாலைக் கட்டணச் சாவடிகளிலும் உள்ள 'வகுப்பு 1' தனியார் வாகனங்களுக்கும், பினாங்கு பாலத்தில் செல்லும் 'வகுப்பு 2' வாகனங்களுக்கும் மட்டுமே பொருந்தும்.

இருப்பினும், நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள சாலைக் கட்டண சாவடிகளுக்கு இந்த கழிவு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிளஸ் நெடுஞ்சாலையின் சுல்தான் இஸ்கந்தர் கட்டட (BSI) சாலைக் கட்டணச் சாவடி மற்றும் மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது இணைப்புப் பாதையின் (LINKEDUA) தஞ்சோங் குபாங் (TTK) சாலைக் கட்டண சாவடி ஆகியவற்றுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வோர் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறும், Touch N' Go கார்டு அல்லது இ-வாலட்டில் போதிய பணம் இருப்பதை உறுதி செய்யுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.