100 மி.மீ-கும் அதிகமான கடும் மழை வார இறுதி வரை நீடிக்கும்: திடீர் வெள்ள அபாயம் அதிகரிக்கும்

4 நவம்பர் 2026, 3:27 AM

ஷா ஆலாம், நவ 4 : கிள்ளான் பள்ளத்தாக்கில் இவ்வார இறுதி வரை ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் (mm) அதிக அளவிலான கடுமையான கன மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் திடீர் வெள்ள அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக காற்றில் அதிக ஈரப்பதம் உள்ளதோடு, மணிக்கு 10 முதல் 20 கிலோமீட்டர் வேகத்தில் காற்று மெதுவாக வீசுகிறது.

இந்த சூழல் இடியுடன் கூடிய மழை மேகங்கள் உருவாக சாதகமாக உள்ளதால், இவ்வார இறுதி வரை ஒவ்வொரு மாலை நேரத்திலும் இதே நிலை நீடிக்கும்.

இந்த நிலை பெர்லிஸ் மற்றும் நெகிரி செம்பிலான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது என மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் தெரிவித்தார்.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப்.

வழக்கமான மழைப்பொழிவு 20 மிமீ ஆகவும், பலத்த மழை 50 மிமீ ஆகவும் இருக்கும் நிலையில், நேற்று முன் தினம் கம்புங் மெலாயு சுபாங்கில், 116 மிமீ அளவுக்கு பெய்த கடுமையான கன மழையால், மக்கள் குடியிருப்பு பகுதியில் ஒரு மீட்டர் உயரத்திற்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் அங்குள்ள லோரோங் மெர்பாவ், ஜாலான் செங்கால், ஜாலான் ரெசாக் மற்றும் ஜாலான் ஜாத்தி ஆகிய நான்கு பகுதிகளில் சுமார் 92 வீடுகள் பாதிக்கப்பட்டன.

அதையடுத்து, சுபாங் பெர்டானாவில் உள்ள சியந்தான் மண்டபம், ரெசாக் மண்டபம் ஆகிய இரு தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டடன.

நேற்று மதியம், பாதிக்கப்பட்ட நிவாரண மையத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கம்புங் மெலாயு சுபாங்கில் தொடர்ந்து வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க, ஆற்றை அகலப்படுத்தி, கூடுதல் நீர்த்தேக்கக் குளங்களை அமைக்கும் சுமார் 500 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வெள்ளத் தடுப்பு திட்டப் பணிகளை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.