சரவணன் மீதான ஊழல் வழக்கு விசாரணை 2027 மார்ச்சில் தொடங்கும்

3 நவம்பர் 2026, 6:26 AM
சரவணன் மீதான ஊழல் வழக்கு விசாரணை 2027 மார்ச்சில் தொடங்கும்

கோலாலம்பூர், நவ 3 : வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீடு ஒப்புதல் தொடர்பில், முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் எதிர்நோக்கியுள்ள 3 ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான வழக்கு விசாரணை, அடுத்த ஆண்டு மார்ச், ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே நடைபெறுமென கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று முடிவு செய்தது.

இரு தரப்பு ஒப்புதலுக்குப் பிறகு, 2027 மார்ச் 4, ஏப்ரல் 12, மே 24 முதல் 27 வரை, ஆகஸ்ட் 17 முதல் 19 வரை மற்றும் ஆகஸ்ட் 23 முதல் 25 வரையிலான தேதிகளை, செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸ்ருல் டாருஸ் நிர்ணயித்தார்.

சரவணனின் தரப்பு வழக்கறிஞர்கள் விரைவான விசாரணையை வலியுறுத்தியிருந்த நிலையில் நீதிமன்றம் இந்தத் தேதிகளை ஒதுக்கியது.

அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் ஜுலைலா ஜமாலுடின், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி 31 பக்கங்கள் கொண்ட தொடர்புடைய ஆவணங்களை இன்று காலை பிரதிவாதி தரப்பிடம் சமர்ப்பித்துள்ளதாகக் கூறினார்.

இதனை சரவணனின் தரப்பு வழக்கறிஞர் டத்தோ கீதன் ராம் வின்சென்ட் உறுதிப்படுத்தினார்.

மேலும், 2027 ஜனவரி 15-ஆம் தேதிக்குள் பிரதிவாதி தரப்பு தங்களது தற்காப்பு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இந்த வழக்கில் மொத்தம் 25 சாட்சிகளை அழைக்க அரசுத் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி, வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீட்டு ஒப்புதலுக்காக RM1.097 மில்லியன் கையூட்டு பெற்றதாகக் கூறப்படும் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளையும் மறுத்து டத்தோஸ்ரீ எம்.சரவணன் நீதிமன்றத்தில் விசாரணை கோரியுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.