PJS 10 பகுதியில் ஏடிஸ் இனப்பெருக்கத்தை தடுக்க சோதனைகள்

1 நவம்பர் 2026, 4:55 AM
PJS 10 பகுதியில் ஏடிஸ் இனப்பெருக்கத்தை தடுக்க சோதனைகள்
PJS 10 பகுதியில் ஏடிஸ் இனப்பெருக்கத்தை தடுக்க சோதனைகள்
PJS 10 பகுதியில் ஏடிஸ் இனப்பெருக்கத்தை தடுக்க சோதனைகள்
PJS 10 பகுதியில் ஏடிஸ் இனப்பெருக்கத்தை தடுக்க சோதனைகள்

பெட்டாலிங் ஜெயா, நவ 1 : பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (MBPJ), டெங்கி பாதிப்பு அதிகமாக உள்ள பிஜேஎஸ் 10 (PJS 10) பகுதியில் நடத்திய தீவிர சோதனையில், 22 இடங்களில் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதை கண்டறிந்தது.

ஜாலான் PJS 10/7A, 10/7B, 10/12, 10/14 மற்றும் 10/16 ஆகிய பகுதிகளில் உள்ள அடுக்குமாடி வீடுகளில், வீடுகளுக்கேச் சென்று சோதனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையின் போது 146 வீடுகளுக்குள் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். 329 வீடுகள் பூட்டப்பட்டிருந்தன, 9 வீடுகள் காலியாக இருந்தன, மேலும் 9 வீடுகளில் இருந்தவர்கள் சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

பூந்தொட்டி தட்டுகள், வாளிகள், குப்பைத் தொட்டிகள், சாய டப்பாக்கள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் தண்ணீர் தேங்கியிருந்த பிளாஸ்டிக் பாத்திரங்கள் ஆகியவற்றில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இப்பகுதியில் டெங்கி பரவலைக் கட்டுப்படுத்த பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் தனது தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு வரும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், ஏடிஸ் கொசுக்கள் உருவாவதைத் தடுக்க வாரத்திற்கு 10 நிமிடங்கள் ஒதுக்கி, தங்கள் வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.