BMW கார் மீது பாய்ந்த 4 குண்டுகள் : இருவரைத் தீவிரமாகத் தேடும் போலீஸ்

31 அக்டோபர் 2026, 8:50 AM
BMW கார் மீது பாய்ந்த 4 குண்டுகள் : இருவரைத் தீவிரமாகத் தேடும் போலீஸ்

சித்தியாவான், அக் 31 - நேற்று அதிகாலை தாமான் ஹிஜாவ், கம்போங் கோ பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ (BMW) கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிய இருவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை மதியம் 1.54 மணியளவில் காரின் உரிமையாளர் தனது வாகனத்தில் நான்கு குண்டு துளைத்த அடையாளங்களைக் கண்டறிந்து போலீசில் புகார் அளித்தார் என மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்ட் ரஹ்மான் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் தனது வீட்டிற்குள் இருந்தபோது பல பலத்த சத்தங்கள் கேட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அதிகாலை 4.16 மணியளவில் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

பின்னர் காரைச் சோதித்தபோது, அதன் வலது பக்கக் கதவில் நான்கு குண்டுகள் பாய்ந்ததற்கான அடையாளங்களை அவர் கண்டறிந்துள்ளார்.

அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் காரை நெருங்கி துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்துள்ளது என்று ஹஸ்புல்லா கூறினார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆயுதச் சட்டம் 1960-இன் பிரிவு 39-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தப்பியோடிய இருவரையும் அடையாளம் காணும் பணிகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை 05-688 6222 என்ற எண்ணிலோ அல்லது 017-682 8005 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) ஹாட்லைன் மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு ஹஸ்புல்லா பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.