ஷா ஆலாம், அக் 31- நேற்று மதியம் பெட்டாலிங் ஜெயா, டாமான்சாரா டாமாய் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில், கூர்மையான ஆயுதத்துடன் நுழைந்த ஒருவன் அங்கிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றான்.
இதனால் அந்த கடைக்கு சுமார் 3 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று மதியம் 1:19 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து போலிசுக்கு தகவல் கிடைத்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷம்சுடின் மாமாட் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் 392 மற்றும் 397 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு, தப்பியோடிய சந்தேக நபரைக் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தையோ பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் செயல்பாட்டு அறையையோ (03-7966 2222) தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



