தூய்மைப் பணியாளர்களுக்கு 200 ரிங்கிட் தீபாவளி சிறப்பு பற்றுச்சீட்டுகள்

30 அக்டோபர் 2026, 9:28 AM
தூய்மைப் பணியாளர்களுக்கு 200 ரிங்கிட் தீபாவளி சிறப்பு  பற்றுச்சீட்டுகள்
தூய்மைப் பணியாளர்களுக்கு 200 ரிங்கிட் தீபாவளி சிறப்பு  பற்றுச்சீட்டுகள்

ஷா ஆலாம், அக் 30 : தீபாவளி பண்டிகைக்கான செலவைக் குறைக்கும் வகையில், அரசாங்க செயலக கட்டிடத்தில் பணிபுரியும் 23 தூய்மைப் பணியாளர்களுக்கு 'ஜோம் ஷாப்பிங்' தீபாவளி பற்றுச்சீட்டுகள் (வவுச்சர்) வழங்கப்பட்டன.

அச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அந்த பற்றுச்சீட்டுகளை வழங்கினார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தூய்மைப் பணியாளர்களுக்கு தீவாவளி பற்றுச்சீட்டுகளை வழங்கினார்படம் : மீடியா சிலாங்கூர்

அந்நிகழ்ச்சியில் வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு மற்றும் சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

200 ரிங்கிட் மதிப்பிலான அந்த பற்றுச்சீட்டுகளை, ஷா ஆலாம் 'லோட்டஸ்' பல்பொருள் அங்காடியில் அவசியமான பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தூய்மைப் பணியாளர்களுக்கு தீவாவளி பற்றுச்சீட்டுகளை வழங்கினார்படம் : மீடியா சிலாங்கூர்

அந்த தீபாவளி உதவியைப் பெற்றவர்களில் ஒருவரான 61 வயதுடைய பி. பார்வதி, தீபாவளி ஏற்பாடுகளை, குறிப்பாக சமையலறைப் பொருட்கள் மற்றும் முறுக்கு செய்யத் தேவையான பொருட்களை வாங்க இந்த பற்றுச்சீட்டு உதவியாக இருக்குமெனக் கூறினார்.

பி.பார்வதி,61

"தீபாவளி பற்றுச்சீட்டு வழங்கிய மந்திரி பெசாருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினருக்கும் நன்றி. சமையலறைப் பொருட்களை வாங்கலாம், இன்னும் வாங்க வேண்டிய சில பொருட்கள் இருந்ததால் மனமும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மாவு வகைகளை வாங்கி முறுக்கு செய்யப் பயன்படுத்தப் போகிறேன்," என்று மூன்று ஆண்டுகளாகத் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வரும் அவர் கூறினார்.

மற்றொருவரான, 60 வயதுடைய பி.மோகனம்பால், அரிசி மற்றும் எண்ணெய் போன்ற அடிப்படைத் தேவைகளை வாங்குவதற்கு இந்தப் பற்றுச்சீட்டைப் பயன்படுத்தலாம் என்று கூறினார். மாநில அரசாங்க செயலக கட்டிடத்தில் ஈராண்டுகளாகப் பணிபுரிந்து வரும் இவர்,'அங்பாவ்' - பணப் பரிசுடன் சேர்ந்து இரண்டாவது முறையாக இந்த உதவியைப் பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

பி. மோகனம்பால்,60

இதற்கிடையில், இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 'ஜோம் ஷாப்பிங்' திட்டத்தின் மூலம் தகுதியான சிலாங்கூர் மாநில மக்களுக்கு 52 லட்சத்து 70,000 ரிங்கிட் ஒதுக்கீட்டில் மொத்தம் 26,354 பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பாப்பாராய்டு இதற்கு முன்பு தெரிவித்திருந்தார்.

மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஷா ஆலாம் சுல்தான் சலாஹுதீன் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தில், தீபாவளியைக் கொண்டாடும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைவருக்கும் 'ஜோம் ஷாப்பிங்' பற்றுச்சீட்டுகளை வழங்கிய பின்னர் ஒன்றாகக் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். (படம்: மீடியா சிலாங்கூர்)

இந்த தீபாவளி பற்றுச்சீட்டுகள் அக்டோபர் 17 முதல் நவம்பர் 7 வரை 56 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள தகுதியான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.