தீபாவளி சந்தை: 136 வியாபாரிகள் சோதனை,இரு வியாபார தளங்களுக்கு அபராதம்

27 அக்டோபர் 2026, 9:11 AM
தீபாவளி சந்தை: 136 வியாபாரிகள் சோதனை,இரு வியாபார தளங்களுக்கு அபராதம்
தீபாவளி சந்தை: 136 வியாபாரிகள் சோதனை,இரு வியாபார தளங்களுக்கு அபராதம்
தீபாவளி சந்தை: 136 வியாபாரிகள் சோதனை,இரு வியாபார தளங்களுக்கு அபராதம்

ஷா ஆலாம், அக் 27 : கிள்ளான், ஜாலான் தெங்கு கிளானா, லோரோங் திங்காட்டில் உள்ள தீபாவளி சந்தையில், நடைபாதையை மறித்து இடையூறு ஏற்படுத்தியதற்காவும், தூய்மை அம்சங்களை அலட்சியப்படுத்தியதற்காவும் இரு வியாபார் தளங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

குறிப்பிட்ட சந்தை தளத்தில் உரிம நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்கான, கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையின் போது அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கிள்ளான் அரச மாநகராட்சி மன்றம் தெரிவித்தது.

வியாபாரிகள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதை உறுதி செய்வதற்காக, மாநகராட்சியின் உரிமத் துறை மற்றும் அமலாக்கத் துறை இணைந்து இந்த கூட்டுச் சோதனையை நடத்தின.

"நடைபாதைகளில் தடைகளை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், சுற்றுப்புறத் தூய்மையை முறையாகப் பராமரிக்கத் தவறியதற்காகவும் இரு வியாபார தளங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

மேலும், சந்தைப் பகுதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மற்றும் கடைகளை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் 136 வியாபாரிகள் மீது இந்தச் சோதனை நடத்தப்பட்டது" என்று கிள்ளான் அரச மாநகராட்சி மன்றம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு பல்வேறு வகையான விற்பனை நடவடிக்கைகளுக்காக மொத்தம் 142 வியாபாரத் தளங்கள் (Lots) தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மன்றம் குறிப்பிட்டது.

அந்த மொத்த எண்ணிக்கையில், 78 தளங்கள் தீபாவளிப் பண்டிகைக் கால அத்தியாவசியப் பொருட்களின் விற்பனைக்காகவும், 20 தளங்கள் மத்தாப்பு விற்பனைக்காகவும் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில், 21 தளங்கள் 3P சிறு வியாபாரிகளுக்காகவும் , எஞ்சிய 23 தளங்கள் பலூன்கள் மற்றும் மருதாணி விற்பனைக்காகவும் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே இக்காலகட்டத்தில், வியாபாரிகள் அனைவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள உரிம நிபந்தனைகளையும் சட்டத் திட்டங்களையும் எப்போதும் மதிக்க வேண்டும் என்று அம்மன்றம் நினைவுறுத்தியுள்ளது.

"வருகையாளர்களின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில், வியாபாரிகள் அனைவரும் தங்களின் சுற்றுப்புறத் தூய்மையைப் பேண வேண்டும் என்றும், பொதுமக்களின் நடமாட்டத்திற்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அது வலியுறுத்தியுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.