ரவாங்கில் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய ஆலை அடுத்தாண்டு கட்டப்படும்

24 அக்டோபர் 2026, 3:02 AM
ரவாங்கில் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய  ஆலை அடுத்தாண்டு கட்டப்படும்
ரவாங்கில் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய  ஆலை அடுத்தாண்டு கட்டப்படும்
ரவாங்கில் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய  ஆலை அடுத்தாண்டு கட்டப்படும்

ஷா ஆலாம், அக் 24: சிலாங்கூர் மாநில அரசின் ஒப்புதலைப் பெற்றப் பின்னர், ரவாங்கிற்கு அருகில் 'கழிவிலிருந்து எரிசக்தியை உற்பத்தி செய்யும்' (WTE) புதிய மின் உற்பத்தி ஆலை கட்டப்படும்.

அந்த ஆலையத்தின் கட்டுமானப் பணிகளை, அடுத்தாண்டு தொடங்க கே.டி.இ.பி கழிவு நிர்வகிப்பு (KDEBWM) நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

அதற்கான திட்டத் தளம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு, விரிவான ஆய்வுகள் உட்பட அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ ரம்லி முகமட் தாஹிர் தெரிவித்தார்.

KDEBWM நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ ரம்லி முகமட் தாஹிர்

அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

"இந்த புதிய ஆலையின் மூலம் குப்பைகளை அகற்றும் முறை மேலும் முறையானதாக மாறும். நிலத்தைத் தோண்டி குப்பைகளைக் கொட்டுவதற்கான பரப்பளவை இனி விரிவுபடுத்த வேண்டிய அவசியமிருக்காது. தற்போது குப்பைகள் புக்கிட் தகார், தஞ்சோங் 12 மற்றும் ஜெராம் ஆகிய பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

'கழிவிலிருந்து எரிசக்தியை உற்பத்தி செய்யும் ' புதிய ஆலைகளை அமைப்பதன் மூலம், குப்பை கொட்டுவதற்காக நிலங்களை ஒதுக்க அரசாங்கத்தை எதிர்பார்த்திருக்க வேண்டியிருக்காது எனவும் அவர் கூறினார்.

மேலும், இந்த அதிநவீன முறை, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்து, தூய்மையான மற்றும் பசுமையான மின்னாற்றலை உற்பத்தி செய்து மக்களுக்குத் திரும்ப வழங்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு, சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ் , டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள உலகத்தரம் வாய்ந்த 'CopenHill' கழிவு மின் உற்பத்தி நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

அதையடுத்து, சிலாங்கூரின் கழிவு நிர்வாகப் பிரச்சினைக்கு நவீன மற்றும் நிலையான தீர்வாக இந்த 'கழிவிலிருந்து எரிசக்தியை உற்பத்தி செய்யும்' தொழில்நுட்பத்தில் மாநில அரசு அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று அறிவுறுத்தியிருந்தார்.

இதனிடையே, சிலாங்கூர் மாநிலத்தின் முதலாவது மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய கழிவிலிருந்து எரிசக்தியை உற்பத்தி செய்யும் 'ஜெராம் 1' ஆலை , கடந்த மே 12-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தனது செயல்பாட்டைத் தொடங்கியது.

இந்த ஆலை நாளொன்றுக்கு 1,500 டன் வரை திடக் கழிவுகளைக் கையாள்வதுடன், மின்சாரத்தையும் உற்பத்தி செய்து வருகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.