மாணவியின் மறைவுக்கு ஃபத்லினா ஆழ்ந்த இரங்கல்

20 அக்டோபர் 2026, 12:36 PM
மாணவியின் மறைவுக்கு ஃபத்லினா ஆழ்ந்த இரங்கல்

ஷா ஆலாம், அக் 20: பள்ளியில், உணவு தொண்டையில் அடைத்துக் கொண்டதால் உயிரிழந்த, டெங்கில் தேசியப் பள்ளியின் முதலாம் ஆண்டு மாணவி தமியா நூர் மிகாய்லாவின் மறைவுக்கு கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபத்லினா சிடெக் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

முதற்கட்ட தகவல்களின்படி, அந்த சிறுமி பள்ளியில் இருந்தபோது மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார், உணவு தொண்டையில் சிக்கியதே இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

அங்கிருந்த ஆசிரியர்கள் உடனடியாக முதலுதவி வழங்கியதைத் தொடர்ந்து, தமியா புத்ராஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நலனில் உரிய கவனம் செலுத்துமாறு சிலாங்கூர் மாநில கல்வித் துறைக்கு அமைச்சர் ஃபத்லினா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் குறித்த விசாரணைக்கு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, நேற்று இரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் குறித்த அறிக்கை பெறப்பட்டதை செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் நூர்ஹிஷாம் பஹாமான் உறுதிப்படுத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.