ராவூப்பில் வெள்ளம்: இரு தற்காலிக நிவாரண மையங்கள் திறப்பு

18 அக்டோபர் 2026, 2:14 AM
ராவூப்பில் வெள்ளம்: இரு தற்காலிக நிவாரண மையங்கள் திறப்பு
ராவூப்பில் வெள்ளம்: இரு தற்காலிக நிவாரண மையங்கள் திறப்பு

குவாந்தான், அக். 18 – தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பகாங்கில் ராவூப் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைப்பதற்காக இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBD) செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நள்ளிரவு 12.16 மணி நிலவரப்படி, 11 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 26 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு, தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கம்போங் பாரு செரோவில் உள்ள பல்நோக்கு மண்டபம் மற்றும் கம்போங் செம்பாம் பாருவில் உள்ள பல்நோக்கு மண்டபம் ஆகிய இரு இடங்களும் நேற்று இரவு 7.30 மணி முதல் தற்காலிக நிவாரண மையங்களாகச் செயல்படத் தொடங்கின.

கம்போங் செரோவில் உள்ள எட்டு வீடுகளும், கம்போங் செம்பாம் பாருவில் உள்ள மூன்று வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. .

இதற்கிடையில், ராவூப் மாவட்ட மலேசிய குடிமைத் தற்காப்புப் படையினர் (APM) சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று நிலைமையை மதிப்பீடு செய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டனர்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளும் வழங்கப்பட்டன.

இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மலேசியக் காவல்துறை (PDRM), மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM), சமூக நலத்துறை (JKM) மற்றும் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழு (JPKK) ஆகியவற்றின் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.