வருமான இடைவெளியைக் குறைத்த சிலாங்கூர்: உலக வங்கி புகழாரம்

17 அக்டோபர் 2026, 3:23 AM
வருமான இடைவெளியைக் குறைத்த சிலாங்கூர்: உலக வங்கி புகழாரம்
வருமான இடைவெளியைக் குறைத்த சிலாங்கூர்: உலக வங்கி புகழாரம்
வருமான இடைவெளியைக் குறைத்த சிலாங்கூர்: உலக வங்கி புகழாரம்

கோலாலம்பூர், அக் 17 - வலுவான பொருளாதார வளர்ச்சி எவ்வாறு வட்டார வருமான இடைவெளியைக் குறைக்க முடியும் என்பதற்கு சிலாங்கூர் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வதாக மலேசிய உலக வங்கியின் முதன்மை பொருளாதார நிபுணர் அபூர்வா சாங்கி தெரிவித்தார்.

சிலாங்கூரின் பணக்கார மற்றும் ஏழ்மையான மாவட்டங்களுக்கு இடையிலான வருமான இடைவெளி 2019-இல் இருந்த இரு மடங்கு என்ற நிலையிலிருந்து தற்போது 1.6 மடங்காகக் குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, சபாக் பெர்னாம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்கள், கிள்ளான் மற்றும் பெட்டாலிங் போன்ற வளர்ந்த நகர்ப்புற மையங்களை விட வேகமாக வளர்ந்து வருகின்றன.

"பொருளாதார ஒருங்கிணைப்பு என்பது இதுதான்," என்று அவர் புதன்கிழமை அன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெற்ற சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் (SIBS) ஒரு பகுதியான சிலாங்கூர் ஆசியான் வர்த்தக மாநாட்டில் (SABC) உரையாற்றும்போது கூறினார்.

சிலாங்கூர் தனது மனித மூலதனத்தில் பெருமளவில் முதலீடு செய்வதையும் அபூர்வா பாராட்டினார்.

"சிலாங்கூர் ஒரு பொருளாதார சக்தி மையமாகும் . இங்கு மலேசியர்களில் ஐந்தில் ஒருவர் வாழ்கின்றனர் மற்றும் இது நாட்டின் பொருளாதார உற்பத்தியில் கால் பகுதிக்கும் மேல் பங்களிக்கிறது."

"2025 ஆம் ஆண்டில் 480,000 மாணவர் நுழைவுகளுடன் , உயர்கல்வி சேர்க்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் சிலாங்கூர் ஆகும். இது தேசிய சேர்க்கையில் 35 விழுக்காடாகும். இது முக்கியமாக தனியார் கல்வி நிறுவனங்களில் பதிவாகியுள்ளது" என்று அவர் கூறினார்.

இதனிடையே ஒட்டுமொத்த வட்டார வளர்ச்சி குறித்து பேசிய அவர் , மலேசியாவில் வட்டார வருமான இடைவெளி இன்னும் உயர்வாக உள்ளது என்றார்.

கோலாலம்பூரின் சராசரி வருமானம் கிளந்தானை விட எட்டு மடங்கு அதிகமாக உள்ளது.

இதை சுட்டிக் காட்டிய அவர், மலேசியா உயர் வருமான நிலையை நோக்கிய தனது பயணத்தில் ஒரே நாடாக ஒன்றிணையுமா, அல்லது பல்வேறு வேகத்தில் நகரும் பல மலேசியர்களைக் கொண்ட நாடாக மாறுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, மலேசியா இந்த தசாப்தத்தின் (2030) இறுதிக்குள் உயர் வருமான நாடாக மாற முடியும். ஆனால், நாட்டின் மக்கள் தொகையில் பாதி அல்லது அதற்குக் குறைவானவர்கள் மட்டுமே அதிக வருமானம் ஈட்டும் ஊதியத்தைப் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றாராவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.