இந்தோனேசியாவுடன் புகை மூட்ட பேச்சு வார்த்தை தொடர்பில் சிறந்ததை செய்து விட்டோம்: அன்வார்

15 அக்டோபர் 2026, 11:13 AM
இந்தோனேசியாவுடன் புகை மூட்ட  பேச்சு வார்த்தை தொடர்பில்  சிறந்ததை செய்து விட்டோம்: அன்வார்

கோலாலம்பூர், அக் 15 - மோசமடைந்திருக்கும் எல்லை கடந்த புகை மூட்டத்தைக் கருத்தில் கொள்ளும்படி இந்தோனேசியாவை வலுயுறுத்தும் அனைத்து முயற்சிகளையும் மலேசிய அரசாங்கம் எடுத்திருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

"நம்மால் இயன்ற அனைத்தையும் செய்து விட்டோம்" என கோலாலம்பூரில், மலாயாப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான குடியிருப்புத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் அன்வார் அந்த சுருக்கமான பதிலை அளித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்லை கடந்த புகை மூட்டப் பிரச்சனையை எதிர்கொள்வதில் அரசாங்கம் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என எழுந்த குறைகூறலுக்கு, அவர் அவ்வாறு பதிலளித்தார்.

புகை மூட்ட விவகாரத்தில் மலேசியா மேலும் கடுமையான போக்குடனும், உறுதியான நிலைப்பாட்டுடனும் செயல்பட்டிருக்க வேண்டுமென நேற்று முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியிருந்தார்.

எனினும், தனது அண்மைய கெலுவார் சிகிஜாப் போட்காஸ்ட் உரையாடல் பதிவில், அப்புகை மூட்டப் பிரச்சனைக்குத் தீர்வு காண அரச தந்திர ஈடுபாடு அவசியமென்பதை தாம் ஒப்புக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.