குடிபோதையில் விபத்து ஏற்படுத்தி இழப்பீடு தராவிடில் சொத்து பறிமுதல் செய்யப்படலாம்

15 அக்டோபர் 2026, 7:20 AM
குடிபோதையில் விபத்து ஏற்படுத்தி  இழப்பீடு தராவிடில் சொத்து பறிமுதல் செய்யப்படலாம்

கோலாலம்பூர், அக் 15 - போதைப்பொருள் அல்லது மது போதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களது வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்கத் தவறினால், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கவும் அரசாங்கம் ஒரு புதிய அணுகுமுறையை வரைந்து வருகிறது.

மக்களவை கேள்வி-பதில் நேரத்தின் போது போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் இதனைத் தெரிவித்தார்.

குற்றவாளிகள் தங்களிடம் போதிய நிதி வசதி இல்லை என்று கூறினாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் (சட்டம் 333) கீழ் உரிய இழப்பீடு மற்றும் நீதி கிடைப்பதை உறுதி செய்யவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

நடப்பில் உள்ள சட்டத்தின் படி குற்றவாளிகளால் இழப்பீடு வழங்க முடியாவிட்டால் கூடுதல் அபராதம் அல்லது கடுமையான சிறைத்தண்டனை விதிக்க முடியும்.

இதற்கிடையில் , இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சென்றடைவதை உறுதி செய்ய குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் தற்போது ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கு ஏதுவாக 333 சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து அடுத்தாண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார்.

மேலும், தற்போதுள்ள டெமெரிட் புள்ளி முறை (Demerit Point System) எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதால், சாலை விபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கையாக, அந்த முறையிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.