பள்ளிகளில் இட நெரிசலை தீர்க்க IBS தொழில்நுட்பம் மூலம் வகுப்பறைகள் விரைந்து கட்டப்படுகின்றன

14 அக்டோபர் 2026, 7:24 AM
பள்ளிகளில் இட நெரிசலை தீர்க்க IBS தொழில்நுட்பம் மூலம் வகுப்பறைகள் விரைந்து கட்டப்படுகின்றன
பள்ளிகளில் இட நெரிசலை தீர்க்க IBS தொழில்நுட்பம் மூலம் வகுப்பறைகள் விரைந்து கட்டப்படுகின்றன

ஹுலு லங்காட் , அக் 14 : பள்ளிகளில் நிலவும் அதிகப்படியான மாணவர் எண்ணிக்கைக்கு தீர்வு காணபதற்காக, கூடுதல் வகுப்பறைகளைக் கட்டும் நடைமுறையை, தொழில்துறை கட்டுமான அமைப்பு (IBS) விரைவுபடுத்துகிறது என கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

இது மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழலை வழங்குகின்றது என அவர் குறிப்பிட்டார்.

கூடுதல் கல்வி வசதிகள் தேவைப்படும் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில், இந்த முறை மிக விரைவான கட்டுமானப் பணிகளைச் சாத்தியமாக்குகிறது என அவர் கூறினார்.

இன்று இங்கு நடைபெற்ற வகுப்பறைகள் ஒப்படைப்பு விழாவிற்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

படம் : மீடியா சிலாங்கூர்

"ஹுலு லங்காட்டைச் சுற்றியுள்ள பெரும்பாலான பள்ளிகள் பழமையானவை என்பதோடு நாளுக்கு நாள் மக்கட் தொகை அதிகரித்து வரும் பகுதிகளில் உள்ளவை ஆகும்.

எனவே, இந்த ஐ.பி.எஸ் (IBS) திட்டங்கள் மூலம் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே, வகுப்பறைகள் தயாராகுவது கல்வி அமைச்சுக்குக் கிடைத்த ஒரு பெரிய ஆசீர்வாதமாகும்,"என்று ஃபட்லீனா கூறினார்.

முன்னதாக, ஐ.பி.எஸ் முறையில் கட்டி முடிக்கப்பட்ட 19 திட்டங்களின் கீழ் உள்ள 68 கூடுதல் வகுப்பறைகளை, ஹுலு லங்காட்டில் உள்ள ஆறு பள்ளிகளுக்கு ( அம்பாங் சம்பூரான் தேசியப் பள்ளி- SK Ampang Campuran, ஜாலான் ரேகோ இடைநிலைப் பள்ளி- SMK Jalan Reko, காஜாங் உத்தாமா இடைநிலைப் பள்ளி -SMK Kajang Utama, டூசூன் நண்டீங் இடைநிலைப் பள்ளி- SMK Dusun Nanding, பண்டார் ரிஞ்சிங் இடைநிலைப் பள்ளி - SMK Bandar Rinching மற்றும் பண்டார் செரி புத்ரா இடைநிலைப் பள்ளி-SMK Bandar Seri Putra) அவர் அடையாளப்பூர்வமாக ஒப்படைத்தார்.

படம் : மீடியா சிலாங்கூர்

விரைவான மக்கட் தொகை வளர்ச்சி, அதிகரித்து வரும் கல்வித் தேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்த வேண்டிய பழைய பள்ளிகளைக் கொண்டுள்ள சிலாங்கூர் மாநிலத்திற்கு இந்தத் திட்டங்களின் நிறைவு, மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.

ஐபிஎஸ் (IBS) கட்டுமானத் தொழில்நுட்பத்தின் கீழ், வகுப்பறைகள் தொழிற்சாலைகளிலேயே முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு, பின்னர் கட்டுமானத் தளங்களுக்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்படுகின்றன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.