முதலீட்டாளர்கள், தொழில்முனைவோரை ஒன்றிணைக்கும் சிலாங்கூரின் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு

14 அக்டோபர் 2026, 2:30 AM
முதலீட்டாளர்கள், தொழில்முனைவோரை ஒன்றிணைக்கும் சிலாங்கூரின் அனைத்துலக வர்த்தக  உச்சநிலை மாநாடு
முதலீட்டாளர்கள், தொழில்முனைவோரை ஒன்றிணைக்கும் சிலாங்கூரின் அனைத்துலக வர்த்தக  உச்சநிலை மாநாடு
முதலீட்டாளர்கள், தொழில்முனைவோரை ஒன்றிணைக்கும் சிலாங்கூரின் அனைத்துலக வர்த்தக  உச்சநிலை மாநாடு
முதலீட்டாளர்கள், தொழில்முனைவோரை ஒன்றிணைக்கும் சிலாங்கூரின் அனைத்துலக வர்த்தக  உச்சநிலை மாநாடு

ஷா ஆலாம், அக் 14: இன்று தொடங்கும் 10-வது சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு (SIBS), வட்டாரத்துவ முதலீடு மற்றும் வர்த்தக மையமாக சிலாங்கூர் மாநிலத்தின் நிலையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தவிருக்கின்றது.

இந்த மாநாடு கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) அக்டோபர் 17 -ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது.

இம்மாநாடு, உயர்தர முதலீடுகளை ஈர்க்கவும் தொழில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், 800 கோடி ரிங்கிட் சாத்தியமான பரிவர்த்தனை மதிப்பினையும் இலக்காகக் கொண்டுள்ளது.

இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மாநாடு, முதலீடு, உற்பத்தி, செமிகண்டக்டர், தொழில்நுட்பம், பராமரிப்பு பொருளாதாரம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஏழு முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இதில் சிலாங்கூர் தொழில்துறை பூங்கா கண்காட்சி(SPARK), சிலாங்கூர் ஆசியான் வர்த்தக மாநாடு, சிலாங்கூர் முதலீட்டு கருத்தரங்கு, சிலாங்கூர் அனைத்துலக பராமரிப்பு கண்காட்சி மற்றும் சிலாங்கூர் ஏ.ஐ மற்றும் செமிகண்டக்டர் உச்சநிலை மாநாடு ( AiSEM@Selangor) ஆகியவை அடங்கும்.

இவற்றுடன், சிலாங்கூர் டெக்ஸ்பியர் உச்சநிலை மாநாடு (STS) மற்றும் 'சிலாங்கூர் கேரியர் அவுட்ரீச்' (SCOUT) வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய இரு புதிய கூறுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த உச்சநிலை மாநாடு வெறும் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், 2030-க்குள் ஆசியான் வட்டாரத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கு சிலாங்கூர் ஒரு முன்மாதிரியாக மாறுவதற்கான விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என சிலாங்கூர் முதலீடு, வர்த்தக, போக்குவரத்துக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ங் சீ ஹான் தெரிவித்தார்.

இந்த மாநாட்டினை, இன்று மாலை மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.

மேலும் சிலாங்கூர் ராஜா முடா தெங்கு அமீர் ஷா மற்றும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் ஆகியோரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

கடந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் நடத்தப்பட்ட 'SIBS@ASEAN' திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த வட்டாரத்துவ விரிவாக்கம் அமைந்துள்ளது என, இன்வெஸ்ட் சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஹசன் அஜாரி இட்ரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

2015-ஆம் ஆண்டு வெறும் 200 மில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனை மதிப்புடன் தொடங்கப்பட்ட இந்த மாநாடு, 2024-இல் 13.85 மில்லியன் ரிங்கிட் வரை உயர்ந்து, ஒட்டுமொத்தமாக 30.56 பில்லியன் ரிங்கிட் சாத்தியமான பரிவர்த்தனை மதிப்பை எட்டி நாட்டின் மிகப்பெரிய வர்த்தக தளமாக உருவெடுத்துள்ளது.

இவ்வாண்டு 10-வது முறையாக நடைபெறும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு (SIBS), வணிக வாய்ப்புகளை ஆராய்வதற்கும் , முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்புகளை உருவாக்குவதற்கும், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோரை ஒன்றிணைக்கும் நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ளவிருக்கிறது.

இந்தத் தளம் சிலாங்கூரை விருப்பமான முதலீட்டு இடமாகவும், ஆசியான் சந்தைக்கான நுழைவாயிலாகவும் தன்னை முன்னிலைப்படுத்துகிறது.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.