தவறி தண்டவாளத்திற்குள் நுழைந்து சிக்கிக் கொண்ட லெக்சஸ் சொகுசு கார்

13 அக்டோபர் 2026, 2:42 PM
தவறி தண்டவாளத்திற்குள் நுழைந்து சிக்கிக் கொண்ட லெக்சஸ் சொகுசு கார்

ஷா ஆலாம், அக் 13 : கிள்ளான், ஜாலான் லிம்புங்கானில் உள்ள கெ.டி.எம்.பி (KTMB) இரயில் நிலையத்தின் தண்டவாளத்திற்குள் 60 வயது முதியவர் ஒருவர் ஓட்டி வந்த சொகுசு ரக லெக்சஸ் ஆர்.எக்ஸ் (Lexus RX) வாகனம் நுழைந்து, சுமார் 130 மீட்டர் தூரம் பயணித்த பின் அங்குள்ள தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது.

நேற்று முதல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் அந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்ததாகக் கிள்ளான் செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி லிம் ஜித் ஹுய் உறுதிப்படுத்தினார்.

முதற்கட்ட விசாரணையில் கோலாலம்பூரைச் சேர்ந்த அந்த முதியவர் இரவு 11.40 மணியளவில் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அந்தச் சம்பவம் நேரிட்டதாகத் தெரிய வந்துள்ளது.

அவர் ஓட்டி வந்த கார் தவறுதலாக அந்த இரயில் தண்டவாளப் பாதைக்குள் நுழைந்து, சுமார் 130 மீட்டர் தூரம் வரை முன்னோக்கிச் சென்ற பிறகு அங்கேயே மாட்டிக்கொண்டது.

பின்னர் அதிகாலை 1.40 மணிக்கு அந்த வாகனத்தை கேடிஎம்பி நிறுவனம் அகற்றியதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் லிம் ஜித் ஹுய் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.