ஆசியானில் கால்பதிக்க விரும்பும் ஐரோப்பிய நிறுவனங்களைக் குறி வைத்துள்ளது சிலாங்கூர்

13 அக்டோபர் 2026, 11:51 AM
ஆசியானில்  கால்பதிக்க விரும்பும் ஐரோப்பிய நிறுவனங்களைக் குறி வைத்துள்ளது சிலாங்கூர்
ஆசியானில்  கால்பதிக்க விரும்பும் ஐரோப்பிய நிறுவனங்களைக் குறி வைத்துள்ளது சிலாங்கூர்

கோலாலம்பூர், அக் 13 : ஆசியான் வட்டாரத்தில் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுக்கு, சிலாங்கூர் மாநிலம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தளமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி தெரிவித்தார்.

மாநிலத்தின் தொழிற்துறை சுற்றுச்சூழல், வலுவான வர்த்தகக் கட்டமைப்பு மற்றும் எளிதான முதலீட்டு வசதிகள் அதற்குப் பக்கபலமாக அமைந்துள்ளன என அவர் கூறினார்.

இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற " ஐரோப்பிய ஒன்றியம் -மலேசியா வர்த்தக தினம்" மீதான கருத்தரங்கில் உரையாற்றிய போது அமிரூடின் இதனைத் தெரிவித்தார்.

ஐரோப்பிய நிறுவனங்கள் சிலாங்கூரை ஆசியான் வட்டாரத்துக்கான நுழைவாயிலாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வரவேற்கப்படுவதோடு , அவர்கள் புதிய சந்தைகளை ஆராய்வதற்கு மாநில அரசு முழு உறுதுணையாக இருக்கும் என்றும் அமிரூடின் உறுதியளித்தார்.

கடந்த 2026-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், சிலாங்கூர் மாநிலம் தேசிய அளவிலான ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 8 % வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்த மைல்கல்லுக்கு மாநிலத்தின் அனைத்துலக விமான நிலையம், கிள்ளான் துறைமுகம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடனும் ஆசியான் சந்தையுடனும் நேரடியாக இணைக்கும் விரிவான இரயில் கட்டமைப்பு ஆகியவையே முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன என்றாரவர்.

சிலாங்கூர் மாநிலத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே அதிகரித்து வரும் பொருளாதார உறவை பறைசாற்றும் விதமாக, கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 16 ஐரோப்பிய நாடுகளிலிருந்து 2,210 ரிங்கிட் பில்லியன் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 308 திட்டங்கள் வாயிலாக 12,653 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

'ஐரோப்பிய ஒன்றியம் -மலேசியா வர்த்தக தினம்' மீதான கலந்துரையாடலை மாநில முதலீட்டு அமைப்பான 'இன்வெஸ்ட் சிலாங்கூர்' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாளை முதல் சனிக்கிழமை வரை சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு (SIBS) நடைபெறவுள்ளது.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.