மோட்டார் சைக்கிளைத் திருடியதால் இளைஞர் கடத்திக் கொலை: 2 நாட்கள் சித்திரவதை

12 அக்டோபர் 2026, 1:34 PM
மோட்டார் சைக்கிளைத் திருடியதால்  இளைஞர் கடத்திக் கொலை: 2 நாட்கள் சித்திரவதை

அலோர் ஸ்டார், அக் 12- மோட்டார் சைக்கிளைத் திருடியதற்காக , 18 வயது இளைஞர் கடத்தப்பட்டு இரு நாட்களாகக் கொடூரமாகச் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக , கெடா மாநில போலீஸ் தலைவர் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.

அந்த இளைஞர், கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி பெண்டாங் பகுதியில் ஒரு கும்பலால் கடத்தப்பட்டார்.

கடத்திய நபர் ஒருவரின் வீட்டில் அந்த இளைஞர் அடைத்து வைக்கப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு, அவருடைய முடியும் வெட்டப்பட்டது.

அக்டோபர் 7-ஆம் தேதி இரவு அந்த இளைஞர் வீட்டிலேயே உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருடைய உடலை குரூன் பகுதியில் உள்ள ஜாலான் ஹார்வர்ட் சாலை ஓரத்தில் அந்தக் கும்பல் வீசிச் சென்றுள்ளது.

அக்டோபர் 8-ஆம் தேதி காலை 8:05 மணிக்கு போலீசாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் உடல் மீட்கப்பட்ட நிலையில், தலையில் ஏற்பட்ட பலத்த காயமே மரணத்திற்குக் காரணம் என்று உடற்கூறாய்வில் தெரிய வந்துள்ளது.

உடல் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே 16 முதல் 24 வயதுக்குட்பட்ட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 14 கைபேசிகள், ஒரு கார், ஒரு கத்தரிக்கோல் மற்றும் பாதிக்கப்பட்ட இளைஞரின் அடையாள அட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தற்போது இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உயிரிழந்த நபர் , 18 வயது முஹம்மட் ஹய்கால் மொஹ்ட் ஷாரில்நிசாம் என அடையாளம் காணப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.