எலிசாவைக் கொலை செய்ததாக வேலை இல்லாத ஆடவன் மீது குற்றச்சாட்டு

12 அக்டோபர் 2026, 9:19 AM
எலிசாவைக் கொலை செய்ததாக  வேலை இல்லாத ஆடவன் மீது குற்றச்சாட்டு

குவந்தான், அக் 12 - சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா போலிடெக்னிக் ( POLISAS) தொழிற்பயிற்சி கூட மாணவியைக் கொலை செய்ததாக , வேலை இல்லாத ஆடவன் மீது இன்று, குவந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

தன் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது , அதைப் புரிந்துக் கொண்டதாக, வழக்கறிஞர் பிரதிநிதிக்காத 19 வயது எஃப். அலன் ஸ்டீவ்குமார் தலையசைத்தான்.

அந்நபர், கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி, காலை மணி 4.32-க்கும் 4.55-கும் இடைப்பட்ட காலத்தில், இங்குள்ள ஆயிர் புத்தே சாலையில், 19 வயது எம். எலிசா ஜோனோவா-வைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டம் செக்க்ஷன் 302-வது பிரிவின் கீழ் அந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அச்சட்டப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் 30 -லிருந்து 40 ஆண்டுகள் வரை சிறையும் 12 முறைக்கும் குறையாத பிரம்படியும் தண்டனையாக விதிக்க முடியும்.

பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் போதைப் பொருள் , நச்சுப் பரிசோதனை அறிக்கையை சமர்பிப்பதற்காக, இந்த வழக்கு நவம்பர் 12- ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீவ்குமார், எலிசாவின் காதலன் என நம்பப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.