சிலாங்கூர் ஜோப்கேர் இஸ்திமேவா: நலிவடைந்த பிரிவினருக்கு 4,000 வேலைவாய்ப்புகள்

11 அக்டோபர் 2026, 9:43 AM
சிலாங்கூர் ஜோப்கேர் இஸ்திமேவா: நலிவடைந்த பிரிவினருக்கு 4,000 வேலைவாய்ப்புகள்

ஷா ஆலாம், அக். 11 — சமூகத்தில் நலிவடைந்த பிரிவினரை மீண்டும் வேலைவாய்ப்புச் சந்தைக்குள் கொண்டுவருவதுடன், அவர்கள் சுயமாக வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள சிலாங்கூர் ஜோப்கேர் இஸ்திமேவா 2026 சிறப்பு வேலைவாய்ப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் பல்வேறு தடைகளை எதிர்கொள்ளும் இத்தகைய பிரிவினருக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டியது அவசியம்.

அவர்களின் திறன்களைப் பயன்படுத்தி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சமூகத்தில் ஆதரவு தேவைப்படும் பிரிவினர் என்பது மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களை மட்டும் உள்ளடக்கியதல்ல. முன்னாள் சிறைக் கைதிகள், மகப்பேறு விடுப்புக்குப் பின்னர் மீண்டும் வேலைக்குத் திரும்பும் பெண்கள், இளைஞர்கள், பூர்வகுடி மக்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களும் இதில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

வேலை பெறுவதற்குத் தடைகளை எதிர்கொள்ளும் பிரிவினருக்கும் உரிய வாய்ப்புகளும் ஆதரவும் கிடைப்பதை உறுதிசெய்வதில் அரசாங்கத்தின் தலையீடு முக்கியமானது என்று அமிருடின் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு தேவைகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய பணிச்சூழலை உருவாக்குவதுடன், முன்னாள் சிறைக் கைதிகள் மீண்டும் சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இத்தகையோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க நிறுவனங்கள் முன்வருவது மற்ற நிறுவனங்களுக்கும் முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.