பள்ளி மாணவர்களுக்கான ஆரம்ப உதவித்தொகை 200 ரிங்கிட்டாக உயர்வு

9 அக்டோபர் 2026, 10:31 AM
பள்ளி மாணவர்களுக்கான ஆரம்ப உதவித்தொகை 200 ரிங்கிட்டாக உயர்வு

ஷா ஆலாம், அக். 9: 2027-ஆம் ஆண்டு பள்ளித் தவணைக்கான ஆரம்பக் கல்வி உதவித்தொகை ஒரு மாணவருக்கு 150 ரிங்கிட்டிலிருந்து 200 ரிங்கிட்டாக உயர்த்தப்படுவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

ஒரு பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ள இந்த உதவித்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 53 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.

இந்த உதவித்தொகை பள்ளிகள் வாயிலாக வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதனிடையே, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது கல்வி அமைச்சுக்கு ஏறக்குறைய 69 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.