சுங்கை தெங்கி வெள்ளத் தடுப்புத் திட்டம் 2028-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும்

8 அக்டோபர் 2026, 4:44 AM
சுங்கை தெங்கி வெள்ளத் தடுப்புத் திட்டம் 2028-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும்
சுங்கை தெங்கி வெள்ளத் தடுப்புத் திட்டம் 2028-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும்
சுங்கை தெங்கி வெள்ளத் தடுப்புத் திட்டம் 2028-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும்

ஷா ஆலாம், அக் 8 - இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) கீழ் திட்டமிடப்பட்ட, சுங்கை தெங்கி ( Sungai Tengi) வெள்ளத் தடுப்புத் திட்டம், 2028-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தில் ஆற்றங்கரை மேம்பாடுகள்,மதகுகள், தொழிற்துறை பம்புகள் ( Pumps) மற்றும் தொடர்புடைய வெள்ளக் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் அடங்கும்.

இத்திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது சிலாங்கூர் நீர்ப்பாசன- வடிகால் துறையால் (JPS) செயல்படுத்தப்படும் என்றும்

துணைப் பிரதமரும், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் மாற்ற அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சுங்கை தெங்கி நதிப் படுகை வெள்ளத் தடுப்பு திட்டத்தின் ஆய்வின் கண்டுபிடிப்புகளைக் கருத்தில் கொண்டு, வடிவமைப்பு, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

சுங்கை தெங்கி நதித் திட்ட ஆய்வு 2026 மே மாதம் தொடங்கப்பட்டு, 2027 ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடங்கப்படும் வரை, ஆற்றின் தூர்வாரல், ஆற்றங்கரை நிலைப்படுத்துதல் மற்றும் வடிகால் வழிகளை மேம்படுத்துதல் போன்ற குறுகிய கால வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சிலாங்கூர் நீர்ப்பாசன- வடிகால் துறையின் மூலம் அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

சிலாங்கூரில் 2026-ஆம் ஆண்டு வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக மொத்தம் 1 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் தஞ்சோங் காராங் தொகுதிக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணிகளுக்காக 6 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் 2026 டிசம்பருக்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.