'விவாதம்' இளைஞர்களின் தன்னம்பிக்கைக்கும் சிந்தனைக்கும் வழிவகுக்கிறது - சிலாங்கூர் இளவரசர்

4 அக்டோபர் 2026, 2:21 AM
'விவாதம்' இளைஞர்களின்  தன்னம்பிக்கைக்கும் சிந்தனைக்கும் வழிவகுக்கிறது - சிலாங்கூர் இளவரசர்
'விவாதம்' இளைஞர்களின்  தன்னம்பிக்கைக்கும் சிந்தனைக்கும் வழிவகுக்கிறது - சிலாங்கூர் இளவரசர்
'விவாதம்' இளைஞர்களின்  தன்னம்பிக்கைக்கும் சிந்தனைக்கும் வழிவகுக்கிறது - சிலாங்கூர் இளவரசர்

பெட்டாலிங் ஜெயா, அக் 3 : ஒரு விஷயத்தை மாறுபட்ட கோணங்களில் இருந்துப் பார்க்கவும், கருத்துகளை தைரியமாக முன் வைக்கவும், பிறர் கருத்துகளுக்கு சவால் விடுக்கவும் 'விவாதம்' இளைஞர்களுக்கு ஒரு மதிப்புமிக்க தளத்தை அமைத்து தருகிறது என சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா தெரிவித்தார்.

"இளைஞர்கள் ஆழமாக சிந்திக்கவும், வெளிப்படையாகக் கேள்வி கேட்கவும், உற்று கேட்கவும், ஒரு கருத்தை வெளிப்படுத்தும் தைரியத்தைப் பெறவும் ஒரு தளத்தை உருவாக்க நாங்கள் விரும்பினோம்," என

நேற்று இங்குள்ள சன்வே ரிசார்ட் தங்கும் விடுதியில் "சிலாங்கூர் இளவரசர் விவாதப் போட்டியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் அவ்வாறு கூறினார்.

இரு நாட்கள் நடைபெற்ற அப்போட்டியில் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவைச் சேர்ந்த வெவ்வேறு அனுபவங்களும் கருத்துகளும் கொண்ட 170 இளம் விவாதக்காரர்களை உள்ளடக்கிய 42 குழுக்கள் பங்கேற்றன.

இத்தகைய வேறுபாடுகள் இளைஞர்களை அவர்களின் நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்க ஊக்குவிப்பதால் விவாதம் மதிப்புமிக்கதாக மாறுகிறது என்று ராஜா மூடா கூறினார்.

"யாராவது நமக்கு முன்னால் நின்று 'நான் உடன்படவில்லை' என்று கூறும்போதுதான் நாம் கவனம் செலுத்துகிறோம், 'நான் நம்புவதை ஏன் நம்புகிறேன்?' என்று நம்மையே கேட்டுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.

அங்குதான் உண்மையான கற்றல் தொடங்குகிறது. அது நடக்கும்போது, 'ஒருவேளை நான் தவறாக இருந்திருக்கலாம்' என்று சொல்ல பயப்படாதீர்கள். அது பலவீனம் அல்ல; அது தோல்வியும் அல்ல; அதுதான் அறிவுசார் தைரியம்," என்று தெங்கு அமீர் ஷா கூறினார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பிளாவட்னிக் அரசுப் பள்ளியில் (Blavatnik School of Government) உருமாற்றத் தலைமைத்துவ உறுப்பினராக தனக்குக் கிடைத்த அனுபவத்தை சுட்டிக்காட்டிய இளவரசர், மக்கள் மாற்று கருத்துக்களைக் கொண்டவர்களுடன் உடன்படாமல் இருந்தாலும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று கூறினார்.

மேலும், இளைஞர்களுக்கு ஆதரவும், அவர்கள் சாய்ந்து கொள்வதற்கான தோள்களும் தேவை என்று இளவரசர் வலியுறுத்தினார்.

"இளைஞர்கள் தங்களை நம்புவதற்கு முன்பு, நாம் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்களுக்கு யாராவது ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களின் கதையைக் கேட்க யாராவது இருக்க வேண்டும்.

உங்கள் குரல் முக்கியமானது என்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம், ஆனால் அந்த குரலுடன் பொறுப்பும் வருகிறது. ஏனெனில் தலைமைத்துவம் என்பது வெறுமனே ஒரு குரலைக் கொண்டிருப்பது மட்டுமல்ல;

தலைமைத்துவம் என்பது மற்ற குரல்களையும் கேட்பதற்கான இடத்தை உருவாக்குவதுமாகும்," என்று ராஜா மூடா கூறினார்.

இப்போட்டி இளைஞர்களை மையமாகக் கொண்ட மேலும் பல உரையாடல்கள், யோசனைகள் மற்றும் வாய்ப்புகளின் தொடக்கமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.