பள்ளியில் மாணவி இறந்துக் கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்

4 அக்டோபர் 2026, 2:01 AM
பள்ளியில் மாணவி இறந்துக் கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்

ஷா ஆலம், அக் 4: ஜோகூர், பத்து பகாட், யோங் பெங்கில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார்.

நான்காம் படிவம் பயிலும் அந்த மாணவி, வீட்டிற்கு வராததால் கவலையடைந்த அவரது பாட்டி பள்ளிக்குத் தேடிச் சென்றபோது, மாலை சுமார் 5.30 மணியளவில் அம்மாணவி கண்டெடுக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் இறந்துவிட்டதாலும், தந்தை கோலாலம்பூரில் பணிபுரிவதாலும் அவர் தனது பாட்டியுடன் வசித்து வந்தார்.

பேத்தி இன்னும் வீடு திரும்பாததால் பாட்டி பள்ளிக்கு விரைந்து சென்று தேடியபோது, மாணவி பலவீனமான நிலையில் தரையில் கிடப்பதைக் கண்டுள்ளார்.

"பாதிக்கப்பட்டவரின் உடலில் காய்ந்த இரத்தக் கறைகளும், தாக்கப்பட்டதைப் போன்ற கன்றிப்போன காயங்களும் காணப்பட்டன.

மேலும், அவர் அருகில் உடைந்த பூந்தொட்டி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது," என்று பெர்ஹிதா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பத்து பகாட் மாவட்ட போலீஸ் தலைவர், அசிஸ்டண்ட் கமிஷனர் ஷஹ்ருலனுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்தார்.

"எந்தவோர் அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன், போலீஸார் இந்தச் சம்பவத்தை உன்னிப்பாக விசாரித்து வருகின்றனர்," என்று அவர் கூறினார்.

அதேவேளையில், பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்களும் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகப் பள்ளி வாசலுக்கு வெளியே திரண்டிருந்தனர்.

ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் குழுவினரும் விசாரணைக்காகப் பள்ளியின் மண்டபத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

பள்ளியின் முக்கிய நுழைவாயில் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.