கள்ளக் குடியேறிகளுக்கு எதிராக நாடு முழுவதும் 10,000 -கும் மேற்பட்ட கைது நடவடிக்கைகள்: உள்துறை அமைச்சர்

3 அக்டோபர் 2026, 5:57 AM
கள்ளக் குடியேறிகளுக்கு எதிராக நாடு முழுவதும் 10,000 -கும் மேற்பட்ட கைது நடவடிக்கைகள்: உள்துறை அமைச்சர்

பெட்டாலிங் ஜெயா, அக் 3 : நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக 10,000-க்கும் மேற்பட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

கள்ளக் குடியேறிகள் விவகாரத்தில் தமது அமைச்சு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதற்கு அதுவே சான்று என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்.

கடந்த கால நிர்வாக அமைப்பில் இருந்த பலவீனங்கள் விளைவாக நாட்டைப் பாதித்து வரும் ஒரு நீண்டகாலப் பிரச்சினையாக கள்ளக் குடியேறிகள் பிரச்சனை உருவெடுத்துள்ளது.

சட்டவிரோத கும்பல்கள், பொறுப்பற்ற உள்ளூர் முதலாளிகள் அந்த பலவீனங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

இது மலேசியர்களுக்கு கடுமையான சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளது.

"என்னுடைய பார்வையில், இவ்வளவு காலமாக நீடித்து வரும் இந்தப் பிரச்சினை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படும் ஒரு சுமையாக மாற இனிமேலும் அனுமதிக்க முடியாது," என்று சைஃபுதீன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

குடிநுழைவுத் துறை ஜனவரி 1 முதல் செப்டம்பர் 29-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 10,374 கள்ளக் குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அந்தச் சோதனைகளின் மூலம், 37,313 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், சட்டவிரோத குடியேறிகளுக்கு வேலை வழங்கி, அவர்களைப் பாதுகாத்த கூடுதல் 1,809 முதலாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

"முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் முதலாளிகளின் கைது அதிகரித்துள்ளது. அதாவது 2023-இல் 346 முதலாளிகளிடமிருந்து, 2024-இல் 1,859 ஆகவும், 2025-இல் 2,202 ஆகவும், மற்றும் 2026 செப்டம்பர் வரை மட்டுமே 1,809 முதலாளிகள் கைது செய்யப்பட்டனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.