எஃப்1 பந்தயம்: உலகளாவிய கவனத்தை ஈர்த்திருக்கும் கோலாலம்பூர்

2 அக்டோபர் 2026, 5:09 AM
எஃப்1 பந்தயம்: உலகளாவிய கவனத்தை ஈர்த்திருக்கும் கோலாலம்பூர்
எஃப்1 பந்தயம்: உலகளாவிய கவனத்தை ஈர்த்திருக்கும் கோலாலம்பூர்

செப்பாங், அக் 2 : செப்பாங்கில் நடைபெறும் F1 கார் பந்தயத்துக்காக, கோலாலம்பூரில் இருப்பது குறித்து தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கும் பல எஃப்1 (F1) பந்தய குழுக்களின் பதிவுகள், சமூக ஊடகங்களில் குறிப்பாக மலேசிய ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறன.

அதோடு, அந்த பதிவுகள் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு நாட்டின் தலைநகரைப் பற்றிய ஒரு பார்வையையும் வழங்கியுள்ளது.

மலேசியாவில் தங்களின் அனுபவங்களை வெளிப்படுத்தியிருக்கும் குழுக்களில் ஃபெராரி (Ferrari), மெக்லாரன் (McLaren), ஆடி (Audi), ஹாஸ் (Haas) மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) ஆகியவை அடங்கும்.

புகழ்பெற்ற பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள் முதல் மெர்டேகா சதுக்கம் , சென்ட்ரல் மார்க்கெட் , புகித் பிந்தாங் , தியான் ஹோவ் கோவில் மற்றும் பத்து மலை வரை, இந்த பதிவுகள் தலைநகரின் சிறப்புகளைப் படம்பிடித்துள்ளன.

மேலும் அக்குழுக்களின் பதிவுகள், " மலேசியாவின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் காணொளியைப் போல் உள்ளன என, சமூக ஊடக பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எஃப்1 ஓட்டுநர்கள், செப்பாங்கில் அதிவேக பந்தயங்கள் தொடங்குவதற்கு முன்பு ஓய்வெடுக்க தலைநகர் உட்பட சில இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டனர்.

மெர்சிடிஸ் (Mercedes) ஓட்டுநர் ஜார்ஜ் ரஸ்ஸல் (George Russell) கெடா, லங்காவி தீவில் தான் கழித்த நேரத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நடப்பு உலக சாம்பியனான லாண்டோ நோரிஸ் (Lando Norris), அவரது மெக்லாரன் சக ஓட்டுநர் ஆஸ்கார் பியாஸ்ட்ரி (Oscar Piastri), கார்லோஸ் சைன்ஸ் (Carlos Sainz), வில்லியம்ஸின் (Williams) அலெக்ஸ் ஆல்பன் (Alex Albon), ஹாஸின் ஆலிவர் பேர்மன் (Oliver Bearman) மற்றும் ஆடியின் கேப்ரியல் போர்ட்டோலெட்டோ (Gabriel Bortoleto) உள்ளிட்ட சக ஓட்டுநர்கள் அவருடன் இணைந்திருந்தனர்.

ரஸ்ஸலின் சக மெர்சிடிஸ் ஓட்டுநரும், தற்போதைய ஓட்டுநர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவருமான கிமி ஆண்டோனெல்லி (Kimi Antonelli), சிலாங்கூர், கோலா லங்காட்டில் உள்ள ஓர் நீர் விளையாட்டுப் பூங்காவை சுற்றிப் பார்த்திருந்தார்.

ஃபார்முலா 1, அனைத்துலக ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (FIA) மற்றும் மலேசியா - பஹ்ரைன் அரசாங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இம்மாதம் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை கல்ஃப் ஏர் பஹ்ரைன் ஜிபி (Gulf Air Bahrain GP) பந்தயத்தை நடத்தும் வாய்ப்பினை மலேசியா பெற்றது.

மலேசியா இதற்கு முன்பு 1999 முதல் 2017 வரை செப்பாங்கில் 'மலேசிய கிராண்ட் பிரி' பந்தயத்தை நடத்தியது. அதன் பிறகு அப்பந்தயம் எஃப்1 அட்டவணையில் இருந்து நீக்கப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.