தந்தையின் துயரத்தைக் குறைக்க தனிமை தாருங்கள்: பொதுமக்களுக்கு முக்ரிஸ் கோரிக்கை

2 அக்டோபர் 2026, 4:02 AM
தந்தையின் துயரத்தைக் குறைக்க தனிமை தாருங்கள்: பொதுமக்களுக்கு முக்ரிஸ் கோரிக்கை

கோலாலம்பூர், அக் 2 - தனது அன்பு மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலியின் மறைவைத் தொடர்ந்து, தனது தந்தை துன் டாக்டர் மகாதிர் முகமட்டிற்கு துக்கம் அனுசரிக்கத் தேவையான நேரத்தையும் தனிமையையும் வழங்குமாறு பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது தாயாரின் இழப்பு முன்னாள் பிரதமரைப் பெரிதும் பாதித்திருப்பதாக விளக்கிய முக்ரிஸ், இத்தகைய ஆழமான பிரிவை ஏற்றுக்கொள்வதற்கு பொறுமையும் அக்கறையும் தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

" தனது அன்பு மனைவி இறந்து ஒரு வாரம் கூட இன்னும் கடக்கவில்லை. துன் மகாதீர் 70 ஆண்டுகள் அவருடன் இருந்தவர். அவர் இனி நம்முடன் இல்லை என்ற உண்மையை அவர் முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு நேரம் எடுக்கும்." என்று அவர் கூறினார்.

101 வயதான டாக்டர் மகாதிர் குடும்ப வீட்டிற்குள் இருப்பது உணர்வுப்பூர்வமாக கடினமாக உள்ளது, ஏனெனில் கிட்டத்தட்ட ஒவ்வொரு அறையும் அவரது மறைந்த மனைவியின் நெஞ்சை உருக்கும் நினைவுகளைக் கொண்டுவருகிறது என்று அவர் கூறினார்.

அந்தக் காரணத்திற்காக, டாக்டர் மகாதிர் தனது உடல் மற்றும் உணர்ச்சி வலிமை மேம்படும் வரை தற்காலிகமாக தேசிய இருதய நிறுவனத்தில் (IJN) தங்கியிருப்பது நல்லது என்று முக்ரிஸ் கூறினார்.

நேற்று அவர் தனது மனைவியின் கல்லறைக்கு சென்றார். அது ஒரு சாதகமான முன்னேற்றம்."

இந்நிலையில், அவர் இக்கட்டான துக்கத்தில் இருப்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவர் மீது தேவையற்ற அழுத்தத்தை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் முக்ரிஸ் வலியுறுத்தினார்.

"நாமே இதே சூழ்நிலையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நிச்சயமாக, நாமும் ஒரு பெரிய இழப்பை உணர்வோம். எனவே அவர் தானாகவே குணமடைய அவருக்கு இடமும் நேரமும் கொடுங்கள்," என்று அவர் கூறினார்

துன் சித்தி ஹஸ்மா செப்டம்பர் 28-ஆம் தேதி IJN-இல் தமது 100-வது வயதில் காலமானார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.