தம்பதி பலியான விபத்து : மாணவரின் கொலை குற்றச்சாட்டு தள்ளுபடி மனு நிராகரிப்பு

30 செப்டெம்பர் 2026, 7:45 AM
தம்பதி பலியான விபத்து : மாணவரின் கொலை  குற்றச்சாட்டு தள்ளுபடி  மனு நிராகரிப்பு

கோலாலம்பூர், செப் 30 - கடந்த மே மாதம் சாலை விபத்தில் சிக்கி இந்தியத் தம்பதியர் பலியான சம்பவம் தொடர்பில், தனக்கு எதிரான கொலை குற்றச்சாட்டினைத் தள்ளுபடி செய்வதில், கல்லூரி மாணவர் தோல்வி கண்டார்.

முன்னதாக, இரு தரப்பு வாதங்களைச் செவிமடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்லாம் சய்னூடின் , குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யும் , அந்த கல்லூரி மாணவர் தரப்பின் பூர்வாங்க ஆட்சேபனையை அனுமதித்திருந்தார்.

அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து , 24 வயதான டெனிஷ் ராமன் கமார் குமரேசன் மீதான கொலை குற்றச்சாட்டுக்கான வழக்கு விசாரணைத் தொடரும்.

கடந்த மே 15-ஆம் தேதி, டெனிஷ் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், 61 வயது எ. துரைசிங்கம், அவரது மனைவியான 56 வயது எ. மேனகாவைக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மே இரண்டாம் தேதி, ஜாலான் அம்பாங் சாலையில் நிகழ்ந்த விபத்தில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அத்தம்பதியர் உயிரிழந்தனர்.

சம்பவத்தின் போது , டெனிஷ் தொயோத்தா வியோஸ் காரை ஓட்டிச் சென்ற வேளை, உயிரிழந்த தம்பதியர் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்தனர்,

டெனிஷ் மீது, குற்றவியல் சட்டம் செக்க்ஷன் 302-வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபீக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளில் இருந்து 40 ஆண்டுகள் வரையிலான சிறை மற்றும் 12-க்கும் குறையாத பிரம்படிகளைத் தண்டனையாக வழங்க முடியும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.