மலேசியர்களின் ஆயூட்காலம் 75.5 வயதாக உயர்வு : சிலாங்கூரில் நீண்ட ஆயூட்காலம்

30 செப்டெம்பர் 2026, 5:26 AM
மலேசியர்களின் ஆயூட்காலம் 75.5 வயதாக  உயர்வு : சிலாங்கூரில் நீண்ட ஆயூட்காலம்
மலேசியர்களின் ஆயூட்காலம் 75.5 வயதாக  உயர்வு : சிலாங்கூரில் நீண்ட ஆயூட்காலம்

கோலாலம்பூர், செப் 30 - இவ்வாண்டு மலேசியர்களின் ஆயூட்காலம் 75.5 வயதாக உயர்ந்துள்ளது.

அதில் பெண்கள் ஆண்களை விட கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் கூடுதல் ஆயுளைப் பெற்றிருப்பதாக நாட்டின் புள்ளி விபரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

2026 -ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தை, 78. 1 வயது வரையில் உயிர் வாழக்கூடும். ஆண் குழந்தை 73.2 வயது வரையில் ஆயூட்காலத்தைப் பெற்றிருக்கும்.

தேசிய புள்ளி விபரத் துறையின், 2024-ஆம் ஆண்டிலிருந்து 2026-ஆம் ஆண்டு வரைக்குமான இறப்பு - ஆயூட்கால விபர அட்டவணையின் படி, அந்த கணிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

2026-இல் சிலாங்கூர் மாநிலம் மிக உயர்வான ஆயூட்காலத்தைப் பதிவுச் செய்திருக்கின்றது.

இம்மாநிலத்தில் 2024 -ஆம் ஆண்டில் 77. 6 வயதாக இருந்த ஆயூட்காலம், 2025 -இல் 77. 9 வயதாக உயர்ந்தது. இவ்வாண்டு அந்த ஆயூட்காலம் 78.2 வயதாக பதிவாகி சிலாங்கூர் நீண்ட ஆயூட்காலம் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் ( 77.3 வயது), லாபுவான் ( 77 வயது) ஆகிய பகுதிகள் உள்ளன.

72.8 வயதுடன் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்ட மாநிலமாக திரெங்கானு உள்ளது.

இன வாரியாக, இவ்வாண்டு சீனர்கள் நீண்ட ஆயூட்காலத்தைக் கொண்டுள்ளனர். ஆண்கள் 75.1 வயது வரையிலும், பெண்கள் 80.8 வயது வரையிலும் உயிர் வாழ்கின்றனர்.

இந்தியர்கள் குறைவான ஆயூட்காலத்தைப் பதிவுச் செய்துள்ளனர். ஆண்கள் 68.8 வயதும், பெண்கள் 75.8 வயது வரையிலான ஆயூட்காலத்தைப் பெற்றுள்ளனர்.

2026-இல் 60 வயதுடைய ஆண்கள் மேலும் 18.9 ஆண்டுகள் வரையிலும், அதே வயதிலானப் பெண்கள் மேலும் 21. 7 ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழ்வர் என தேசியப் பதிவு துறை குறிப்பிட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.