கண்காணிப்புக்காக துன் மகாதீர் IJN-னில் அனுமதி

30 செப்டெம்பர் 2026, 3:02 AM
கண்காணிப்புக்காக துன் மகாதீர்  IJN-னில் அனுமதி

ஷா ஆலாம், செப் 30 - கண்காணிப்பிற்காக, நேற்று முதல் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மட், ஐ.ஜே.என் தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது புதல்வர் டான் ஸ்ரீ மொக்சானி மஹாதீர் அதனை உறுதிப்படுத்தினார்.

தமது தந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், கவலைப்படும் வகையில் இல்லையெனவும் அவர் கூறினார்.

" துன் சித்தி ஹஸ்மாவின் மறைவை அடுத்து, கடந்த இரு தினங்கள் கடுமையான தருணத்தை துன் மகாதீர் எதிர்கொண்டார். எனவே, அவரது உடல் நிலையைக் கண்காணிக்கவே ஐ.ஜே.என் -னில் சேர்க்கப்பட்டார்" என மொக்சானி குறிப்பிட்டார்.

100-வது வயதை எட்டிய துன் டாக்டர் சித்தி ஹஸ்மா, இம்மாதம் செப்டம்பர் 28-ஆம் தேதி ஐ.ஜெ.என்னில் காலமானார். அதே தினத்தன்று அவரது நல்லுடல் புத்ராஜெயா பிரெசெண்ட் 20 -இல் உள்ள தேசிய இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே, துன் சித்தி ஹஸ்மாவின் மறைவுக்கு முன்பாக, ஐ.ஜெ.என்-னில் சிகிச்சை நெடுகே துன் மகாதீர் , துன் சித்தி ஹஸ்மாவின் அருகிலே இருந்ததாக அவரது மற்றொரு புதல்வரான டத்தோ ஸ்ரீ முக்ரீஸ் மகாதீர் இதற்கு முன்பு கூறியிருந்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.