அரசாங்க கட்டிடங்களில் சூரிய மின்சக்தி பயன்பாடு விரிவுப்படுத்தப்படும்

29 செப்டெம்பர் 2026, 2:14 PM
அரசாங்க கட்டிடங்களில் சூரிய மின்சக்தி பயன்பாடு விரிவுப்படுத்தப்படும்
அரசாங்க கட்டிடங்களில் சூரிய மின்சக்தி பயன்பாடு விரிவுப்படுத்தப்படும்
அரசாங்க கட்டிடங்களில் சூரிய மின்சக்தி பயன்பாடு விரிவுப்படுத்தப்படும்

குவாலா லாங்காட், செப் 29 - கடந்தாண்டு வரையில், சிலாங்கூர் மாநிலத்தின் 70 நிர்வாகக் கட்டிடங்கள் முழுமையாக சூரிய மின்சக்தி தகடு வசதியைப் பெற்றுள்ளன.

ஒட்டுமொத்தமாக நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி திறன் 5.69 மெகாவாட் (MW) ஆகும்.

அதில் 2.23 மெகாவாட் திறன் சிலாங்கூர் மாநில அரசுச் செயலகம் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட- நில அலுவலக கட்டிடங்களில் நிறுவப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

அரசாங்க கட்டிடங்களில் பசுமை மின் சக்திப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் மாநில அரசாங்கத்தின் முயற்சியினை அது காட்டுவதாக அவர் கூறினார்.

அதே வேளையில், டிஎன்பி ரினியூவபிள்ஸ் நிறுவனம்(TNB Renewables Sdn. Bhd - TRE) மற்றும் வேர்ல்டுவைட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (Worldwide Holdings Berhad - WHB) ஆகியவற்றின் கூட்டுறவோடு உருவாக்கப்பட்ட 'அரசாங்க பசுமை மின்சக்தி' திட்டத்தின் மூலம் மாநில அரசு உத்திகளை ஆராய்ந்து வருகிறது.

இத்திட்டம் மூலம் உலு பெர்னாமில் சூரிய மின்சக்தி தோட்டம்(solar farm) அமைக்கப்படும்.

அதன் மூலம், அரசாங்க வசதிகளில் சூரிய மின்சக்தி பயன்பாடு விரிவுபடுத்தப்படுமென ஜமாலியா செய்தியாளர்களிடம் கூறினார்.

தெலுக் பங்லீமா காராங் தொழிற்துறைப் பகுதியில் அமைந்திருக்கும் ரெனேசஸ் செமிகண்டக்டர் கே.எல் நிறுவனத்தின் (Renesas Semiconductor KL Sdn Bhd ) சூரிய மின்சக்தி கார் நிறுத்துமிடத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

படம் : மீடியா சிலாங்கூர்

கடந்த ஜூன் மாதம், பசுமை தொழில்நுட்பத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, குடியிருப்புப் பகுதிகளில் சூரிய மின்சக்தி தகடுகளை (solar panels) கூரைகளில் பொருத்துவதற்கு 100 விழுக்காடு வரை மதிப்பீட்டு வரி தள்ளுபடி (assessment tax rebate) வழங்கப்படும் என சிலாங்கூர் அரசாங்கம் அறிவித்திருந்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.