சமையலறையில் கரப்பான் பூச்சி, எலி எச்சங்கள்: கிள்ளானில் 3 உணவகங்கள் மூடப்பட்டன

29 செப்டெம்பர் 2026, 4:39 AM
சமையலறையில் கரப்பான் பூச்சி, எலி எச்சங்கள்: கிள்ளானில் 3 உணவகங்கள் மூடப்பட்டன
சமையலறையில் கரப்பான் பூச்சி, எலி எச்சங்கள்: கிள்ளானில் 3 உணவகங்கள் மூடப்பட்டன

ஷா ஆலாம், செப் 29: தாமான் கிள்ளான் உத்தாமாவில் (Taman Klang Utama) உள்ள மூன்று உணவகங்களின் சமையலறை மற்றும் உணவு சேமிப்புப் பகுதிகளில் கரப்பான்பூச்சி, ஈ மற்றும் எலிகளின் எச்சங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அவை 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டன.

இந்த ஒருங்கிணைந்த சோதனையில் கிள்ளான் அரச மாநகர் கழகத்தின் (MBDK) உரிமத்( லைசென்ஸ்) துறை, MBDK அமலாக்கத் துறை மற்றும் கிள்ளான் மாவட்ட சுகாதார அலுவலகம் (PKD) ஆகியவை ஈடுபட்டன.

அதிகாரிகள் கிள்ளான் உத்தாமில் உள்ள உணவுக் கடையில் சோதனை நடத்தினர் : படம்: கிள்ளான் மாநகர் கழகத்தின் ஃபேஸ்புக்

அந்த மூன்று உணவகங்களும் மிகவும் மோசமான சுகாதார நிலையில் இருந்ததோடு, முறையாகப் பராமரிக்கப்படவும் இல்லை கிள்ளான் அரச மாநகர் கழகம் தெரிவித்தது.

"சோதனையின் போது சமையலறையிலும் உணவு சேமிப்புப் பகுதியிலும் கரப்பான்பூச்சி, ஈ மற்றும் எலிகளின் எச்சங்கள் கண்டறியப்பட்டன.

"இதனைத் தொடர்ந்து, தூய்மைப்படுத்துதல் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, கிள்ளான் மாவட்ட சுகாதார அலுவலகம் (PKD) அந்த வளாகங்களை 14 நாட்களுக்கு மூடக்கோரி மூன்று நோட்டிஸ் உத்தரவு அறிவிப்புகளை வெளியிட்டது" என கிள்ளான் மாநகர் கழகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

அதிகாரிகள் கிள்ளான் உத்தாமில் உள்ள உணவுக் கடையில் சோதனை நடத்தினர் : படம்: கிள்ளான் மாநகர் கழகத்தின் ஃபேஸ்புக்

மேலும், அங்கு பணிபுரிந்த சில உணவு கையாளுநர்கள் (Food handlers) இன்னும் டைபாய்டு (Typhoid) தடுப்பூசி போடவில்லை என்பதும், உணவைக் கையாளும் போது சிலர் தலைக்கவசம் அணியாமலும், செருப்பு அணிந்திருந்ததும் சோதனையில் தெரியவந்தது.

அதிகாரிகள் கிள்ளான் உத்தாமில் உள்ள உணவுக் கடையில் சோதனை நடத்தினர் : படம்: கிள்ளான் மாநகர் கழகத்தின் ஃபேஸ்புக்

அதே சோதனையின் போது, நடைபாதை அல்லது பொது இடங்களில் தடைகளை ஏற்படுத்தியதற்காக இரு வணிக வளாகங்களுக்கு கிள்ளான் மாநகர் கழகம் அபராதம் விதித்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.