காலணிக்குள் போதைப் பொருள் : ஜகார்த்தாவில் 5 மலேசியர்கள் கைது

28 செப்டெம்பர் 2026, 3:51 PM
காலணிக்குள் போதைப் பொருள் : ஜகார்த்தாவில் 5 மலேசியர்கள் கைது

ஜகார்த்தா, செப் 28 - தங்களது காலணிகளுக்குள் மறைத்து, 5 கிலோ எடோமிடேட் என்ற செயற்கைப் போதைப்பொருளைக் கடத்தியதற்காக ஜகார்த்தாவின் சுகர்ணோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் இந்தோனேசிய போலீசார் ஐந்து மலேசியர்களைக் கைது செய்தனர்.

கோலாலம்பூரிலிருந்து ஏர் ஆசியா விமானம் மூலம் வந்திறங்கிய அந்த ஐந்து நபர்களின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்டு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒவ்வொருவரின் காலணியின் உள்பகுதியில் தலா 500 கிராம் எடையுள்ள இரு பாக்கெட்டுகள் வீதம் மொத்தம் 10 போதைப்பொருள் பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், இந்த ஐந்து பேரும் டெலிகிராம் செயலியில் "மேடம்" என்ற பெயரைக் கொண்ட ஒரு நபரால் இயக்கப்பட்டுள்ளனர் என்பதும், அவர்கள் மத்திய ஜகார்த்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்களது காலணிகளைச் சிவப்பு நிறப் பையில் வைத்து 25 வயதுடைய சீன நாட்டவர் ஒருவரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் அந்தச் சீன நாட்டவரைக் கைது செய்து, வட ஜகார்த்தாவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினர்.

அந்தக் குடியிருப்பு, மயக்க மருந்து வகையைச் சேர்ந்த எடோமிடேட் கலந்த வேப் கருவிகளைத் தயாரிக்கும் ரகசிய ஆய்வகமாகச் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்து 21,000 காலியான வேப் கருவிகள், 15,000 சிலிகான் மூடிகள், சுவையூட்டும் திரவங்கள் மற்றும் பல்வேறு உபகரணங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தச் சீன நாட்டவர் செப்டம்பர் மாதம் முதல் இந்தோனேசியாவில் தங்கி, 'சிக்னல்' செயலி மூலம் சரக்கு பட்டியலைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளைப் பெற்று வந்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த பொருட்களின் மதிப்பு சுமார் 33.8 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.