அல்ஃபார்ட் காரில் 690 கிலோ கெதும் இலைகளைக் கடத்திய இருவர் கைது

28 செப்டெம்பர் 2026, 3:20 PM
அல்ஃபார்ட் காரில் 690 கிலோ கெதும் இலைகளைக் கடத்திய இருவர் கைது

ஈப்போ, செப் 28 : சொகுசு கார் ஒன்றில் சுமார் 27,600 ரிங்கிட் மதிப்புள்ள 690 கிலோகிராம் கெதும் (Ketum) போதை இலைகளைக் கடத்திச் சென்ற இரு உள்நாட்டவர்கள், நேற்று அதிகாலை வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (PLUS) 371-வது கிலோமீட்டரில் கைது செய்யப்பட்டனர்.

21 மற்றும் 31 வயதுடைய அவ்விரு நபர்களும் அதிகாலை 2 மணியளவில் புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) நெடுஞ்சாலை ரோந்துப் படையினரால் (EMPV) கைது செய்யப்பட்டதாக

முவாலிம்மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டண்ட் காலித் முகமட் தெரிவித்தார்.

உள்ளூர் சந்தைக்கு கெதும் இலைகளை விநியோகிக்கும் நபர்களாக இவர்கள் செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

"அவர்கள் பயன்படுத்திய டொயோட்டா அல்ஃபார்ட் (Toyota Alphard) காரைச் சோதனையிட்டபோது, 69 கருப்பு பிளாஸ்டிக் மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 690 கிலோகிராம் கெதும் இலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றின் சந்தை மதிப்பு 27,600 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

விசாரணைக்கு உதவும் வகையில் அந்த டொயோட்டா அல்ஃபார்ட் காரையும், அதன் ரிமோட் கன்ட்ரோல் சாவியையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில்,கைதானமுதல் நபர் மீது ஒரு போதைப்பொருள் வழக்கும் ஐந்து குற்றவியல் வழக்குகளும் உள்ளன என்றும், இரண்டாவது நபர் மீது இரு போதைப்பொருள் வழக்குகளும் ஒரு குற்றவியல் வழக்கும் ஏற்கனவே பதிவாகியுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவர் மீதும் தற்போது 1952 ஆம் ஆண்டு நச்சுப் பொருட்கள் சட்டத்தின் (Poisons Act 1952) பிரிவு 30(3)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.