HEAL 15555 மனநல உதவி எண்: அழைப்புகள் இரு மடங்கு அதிகரிப்பு

28 செப்டெம்பர் 2026, 10:30 AM
HEAL 15555 மனநல உதவி எண்: அழைப்புகள் இரு மடங்கு அதிகரிப்பு

ஷா ஆலம், செப் 28 : கடந்தாண்டு மனநல உதவிக் கோரி 'HEAL 15555'- எண்ணுக்கு அழைத்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்தது.

2024-ல் 42,990-ஆக இருந்த அந்த அழைப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகி 90,981 ஆக உயர்ந்தது.

இந்த அதிகரிப்பு மனநலப் பிரச்சினைகள் தீவிரமடைவதற்கான ஓர் அறிகுறியாக மட்டும் பார்க்கப்படக் கூடாது என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுள்கிப்லி அகமட் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுள்கிப்லி அஹ்மாட் - படம் : பெர்னாமா

மாறாக, அதிகரித்திருக்கும் அந்த அழைப்புகள், சமுதாயத்தில் உளவியல் ஆதரவைப் பெறுவதற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதையும், தொழில்முறை உதவியைப் பெற மக்கள் தயாராக இருப்பதையும் பிரதிபலிக்கின்றன என அவர் கூறினார்.

மேரு , மாரா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற, கருத்தை மாற்றுவோம், நம்பிக்கையை ஒளிரச் செய்வோம் (Change the Narrative, Ignite Hope) என்ற கருப்பொருளிலான தேசிய சுய-காய தடுப்பு தின விழாவைத் தொடங்கி வைத்துப் பேசியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து HEAL 15555 உதவி அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது நான்கு ஆண்டுகளுக்கு மேலான நிலையில், மொத்தம் 267,873 அழைப்புகள் பெறப்பட்டதாக சுள்கிப்லி தெரிவித்தார்.

இதில் 220,856 அழைப்பாளர்கள் (82 % ) உணர்வு ரீதியலான ஆதரவைப் பெற்றனர்.

அதேசமயம் 47,014 பேர் (18 % ) சிறப்புத் தலையீட்டுக்கான உதவியை பெற்றனர். இந்தச் சேவையானது சுகாதார அமைச்சின் உளவியல் மற்றும் ஆலோசனை அதிகாரிகள், ஆலோசகர்கள் மற்றும் உளவியலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

தற்கொலை எண்ணங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகள் உள்ளிட்ட 518 தற்கொலை சம்பவங்களையும் HEAL 15555 கையாண்டுள்ளதாக அவர் கூறினார்.

இதில், தற்கொலை எண்ணங்களைக் கொண்ட 347 சம்பங்கள் நேரடித் தலையீட்டைப் பெற்றன.

மேலும், தற்கொலைக்கு முயன்ற 171 சம்பவங்கள் போலீஸ் மற்றும் அவசரப் பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் MERS 999 மூலம் பரிந்துரைக்கப்பட்டன.

“இது பல அமைப்புகளின் கூட்டு முயற்சியாகும். தற்கொலை முயற்சி சம்பவங்களைக் கையாள்வதில் போலிசும் அவசரப் பிரிவும் ஓர் அணியாக இணைந்து செயல்படுகின்றன,” என்றார் அவர்.

அழைப்புகளின் அதிகரிப்பு சமூகத்தில் மனநல அறிவு மேம்பட்டுள்ளதையும் காட்டுகிறது என்றார் அவர்.

“இது அதிகமானோர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. விழிப்புணர்வு அதிகரிப்பு மற்றும் உதவி பெறும் ஆர்வம் என இதை மக்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்றாரவர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.