வானில் திருடுப் போன 60,000 ரிங்கிட்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

25 செப்டெம்பர் 2026, 6:12 AM
வானில் திருடுப் போன 60,000 ரிங்கிட்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

ஜோர்ஜ் டவுன், செப் 25 - கோலாலம்பூரிலிருந்து பினாங்கு நோக்கிய விமானப் பயணத்தின்போது, உள்ளூர் ஆடவர் ஒருவரின் 60,000 ரிங்கிட் ரொக்கப் பணம் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய வெளிநாட்டு நபர் ஒருவரை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.

பயணி ஒருவர் (வயது 54) பாயான் லெப்பாஸில் உள்ள பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தை (LTAPP) வந்தடைந்ததும், தனது முதுகுப்பையில் (backpack) வைத்திருந்த ரொக்கப் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து நேற்று புகார் அளித்திருந்தார் என பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவால் அப் வஹாப் தெரிவித்தார்.

"பாதிக்கப்பட்ட நபர் அதே விமானத்தில் பயணித்த ஒரு வெளிநாட்டு நபரின் மீது சந்தேகம் கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருவதோடு, அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் விவரங்களையும் சேகரித்து வருகிறது.

சந்தேகிக்கப்படும் நபரின் நடமாட்டத்தைக் கண்டறிய சிசிடிவி காட்சிகளையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். அந்த நபரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன" என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு திருட்டுக் குற்றத்திற்கான குற்றவியல் சட்டத்தின் பிரிவு 379-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அண்மைய காலமாக விமானங்களுக்குள் பயணிகளின் உடமைகள் காணாமல் போவது அல்லது திருட முயல்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து புகார் செய்யப்பட்டு வருகின்றன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.