ஷா ஆலாம், செப் 24 : வரும் செப்டம்பர் 27- ஆம் தேதி நடைபெறவுள்ள 2026 'லெ டூவர் டி லங்காவி'(LTdL) சைக்கிள் பந்தயத்திற்காக, கோலா சிலாங்கூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள சில முக்கிய சாலைகள் படிப்படியாக தற்காலிகமாக மூடப்படவிருக்கின்றன.
இந்தச் சாலை மூடல் காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை அமலில் இருக்கும் என கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஜஹாருதீன் தாஜுதீன் தெரிவித்தார்.
புக்கிட் செராக்கா (Bukit Cherakah - மொக்தார் தஹாரி சாலை சமிக்ஞை விளக்கு முதல் டேசா கோல்ஃபீல்டு சாலை சமிக்ஞை விளக்கு வரை)
கோலாலம்பூர் - கோலா சிலாங்கூர் சாலை (டேசா கோல்ஃபீல்டு முதல் அஸாம் ஜாவா முச்சந்தி சாலை சமிக்ஞை விளக்கு வரை)
கிள்ளான் முதல் தெலுக் இந்தான் சாலை (கிமீ 41 அஸாம் ஜாவா முதல் கிமீ 74.4 கோலா சிலாங்கூர் - சபாக் பெர்னாம் எல்லைப் பலகை வரை) ஆகிய சாலைகள், பந்தயத்திற்காக மூடப்படவுள்ளன.
அதையடுத்து கோலா சிலாங்கூர் - ரவாங் சாலை, தஞ்சோங் காராங், ஜாலான் பன்கேனல் (Jalan Bankenal, Tanjong Karang) ஆகிய இரு மாற்று வழிச் சாலைகளை வாகனமோட்டிகள் பயன்படுத்தலாம்.



