மாணவருடன் முறைகேடான உறவில் ஆசிரியை: கல்வித் துறை விசாரணை

24 செப்டெம்பர் 2026, 11:45 AM
மாணவருடன் முறைகேடான உறவில் ஆசிரியை: கல்வித் துறை விசாரணை

ஷா ஆலாம், செப் 24 - மாணவருடன் முறைகேடான உறவில் அல்லது பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் விசாரிக்கப்படும் ஆசிரியர், அப்பள்ளிக்கூடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்.

விசாரணை நடைபெறும் வரையில், அவர் மாவட்ட கல்வி அலுவலகம் அல்லது மாநில கல்வித் துறைக்கு மாற்றப்படுவார் என கல்வித் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் மொஹமட் அசாம் தெரிவித்தார்.

அச்சம்பவத்துடன் தொடர்புடைய மாணவருடன், அந்த ஆசிரியர் தொடர்பில் இல்லாமல் இருப்பதற்காக அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

முன்னதாக, பள்ளிக்கூட ஆசிரியை, 17 வயதுடைய ஆண் மாணவருடன் முறைகேடான உறவில் இருந்ததாகப் புகார் பெறப்பட்டது.

அந்த ஆசிரியை, மாணவர் தொடர்பான காணொளி வெளியானதை அடுத்து, அந்த முறைகேடான உறவு குறித்து மாணவரின் குடும்பத்திற்கும் பள்ளிக்கும் தெரிய வந்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.