ஷா ஆலாம், செப் 22 - சிறிய பால்கனியுடன் கூடிய அடுக்குமாடி வீட்டில் வசித்தாலும், ஆரோக்கியமான செழிப்பான காய்கறிகளை நடுவதற்கு அது தடையல்ல.
31 வயதான மர்லியானா மொஹமட்டிற்கு வீட்டில் காய்கறிச் செடிகளை நடுவது ஒரு பொழுது போக்கு மட்டுமல்ல , தான் கைப்பட நட்டு அறுவடைச் செய்த காய்கறிகளை குடும்பத்த்தினர் சேர்ந்து சாப்பிடும் வாய்ப்பினையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அன்றாட சமையலுக்குத் தேவையான செடிகளை இவர் தேர்ந்தெடுத்துள்ளார். அவற்றுக்கு இயற்கையான உரங்களையே இடுகிறார். பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை மூலதனங்களையே பயன்படுத்துகிறார்.
இதன் மூலம் தான் உட்கொள்ளும் உணவின் மீது தனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக மர்லியானா தெரிவித்தார்.
அதோடு தனது அன்றாட செலவையும் அது குறைத்திருப்பதாக, புஞ்சாக் ஆலாமில் உள்ள தனது வீட்டில் சந்தித்த போது அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

குறுகிய இடத்தைப் பயனான முறையில் பயன்படுத்துவது
அனைத்து தாவரங்களையும் நடுவதற்கு பெரிய இடமோ , சிக்கலான பராமரிப்பு முறையோ தேவையில்லை.
புதிதாக பால்கனியில் காய்கறிச் செடிகளை நட விரும்புபவர்கள் , பசலைக் கீரை, கறிவேப்பிலை, கஸ்தூரி எலுமிச்சை, இருவாட்சி எலுமிச்சை ( limau purut) போன்ற எளிதாக பராமரிக்கக் கூடிய செடிகளை நடலாமெனப் பரிந்துரைத்தார்.
அதோடு , அவர்கள் விதைகளின் மூலம் செடிகளை நட வேண்டுமென்பதில்லை. செடிக்கன்றுகள் அல்லது தண்டு வெட்டினைப் பயன்படுத்தலாம். இது நடவு முறையை விரைவுப்படுத்துமென்றாரவர்.
மேலும், புதிய ஜாடிக்கு செடியை மாற்றும்போது அதன் வேர்ப்பகுதியில் உள்ள பழைய மண்ணை அப்படியே மாற்றி விட வேண்டாம். பின்னர் செடி இறக்கக் கூடுமென மர்லியானா அறிவுறை கூறினார்.

பால்கனியிலிருந்து சமயலறைக்கு
பசலைக் கீறையை சந்தையிலிருந்து வாங்கும்போது , வெட்டிய அதன் தண்டினை வீட்டில் நடலாம்.
ஒரு வாரத்திற்கு அது வளர்ந்து விடும். பசலைக்கீரையை அன்றாட சமையலுக்கு பயன்படுத்தலாம். எலுமிச்சையை பானம் தயாரிக்க உபயோகிக்கலாம்.
இப்படி நாம் நடும் காய்கறிகள் அன்றாட சமையலுக்கு உதவியாக அமைவதாக மர்லியானா கூறினார்.
சிறிய இடத்தில் செடிகளை நட்டு வளர்க்கும்போது, நமக்கு பெரிய தோட்டம் வேண்டுமெனும் தோற்றத்தை மாற்றிவிடுமென இவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.





