ஷா ஆலாம், செப் 22 - மலாக்கா சட்டமன்றம் நாளை கலைக்கப்படுகிறது.
அந்த அறிவிப்பு, அம்மாநிலத்தில் அடுத்த 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல் நடத்துவதற்கு வழி அமைத்திருக்கின்றது.
மலாக்கா யாங் டிபெர்துவா துன் டாக்டர் மொஹமட் அலி ருஸ்தாம், மாநில சட்டமன்ற கலைப்புக்கு அனுமதி அளித்திருப்பதாக மாநில முதலைமைச்சர் அப் ரவூஃப் யூசோப் தெரிவித்தார்.
ரவூப்பின் அந்த அறிவிப்பு, சில வாரங்களாக நீடித்த அம்மாநிலத் தேர்தல் குறித்த ஆருடங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
2021 மலாக்கா மாநிலத் தேர்தலில், 28 சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி 21 இடங்களை வென்றது. ஹராப்பான் கூட்டணி 5 இடங்களையும், பெரிக்காத்தான் கூட்டணி இரு இடங்களையும் கைப்பற்றியது.



