அலோர் காஜா, செப் 20 - இன்று நள்ளிரவு இங்குள்ள டுரியான் துங்கால், தாமான் இனாங் சாரியில் , காரொன்றில் ஒரு பெண்ணும் ஆணும் இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டனர்.
நள்ளிரவு மணி 12.05-க்கு 31, 33 வயதுடைய அவ்விருவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக , அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஹ்மாட் அபு பாக்கார் தெரிவித்தார்.
தொடக்க விசாரணையில், கைகலப்பு, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் ஏதும் இச்சம்பவத்தில் நிகழவில்லை என தெரிய வந்துள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக போலீசார் கடந்த செப்டம்பர் 17 -ஆம் தேதி பெண் ஒருவர் காணாமல் போயிருப்பதாக, அவரது தாயார் போலிசில் புகார் அளித்திருந்தார்.
காரில் இறந்து கிடந்தப் பெண்ணும் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட பெண்ணும் ஒருவரே என உறுதிச் செய்யப்பட்டது. அவருடன் இருந்த ஆண் அவருக்கு பழக்கமானவர் என நம்பப்படுகிறது.
உடல்களில் இருந்த வீக்கத்தின் அடிப்படையில் அவ்விருவரும் இறந்து மூன்று தினங்கள் ஆகியிருக்கலாமென நம்பப்படுகிறது.
பரிசோதனையில் அவ்விருவரும் மலாக்காவை தங்களது வீட்டு முகவரியாகக் கொண்டுள்ளனர். இவ்வேளையில் அப்பெண்ணின் முதலாளியும் , அவர் கடந்த 3 நாட்களாக வேலைக்கு வரவில்லை என்றும் கூறியிருந்தார்.



