ஷா ஆலாம், செப் 20 : நேற்று மேற்கொள்ளப்பட்டட சிறப்பு நடவடிக்கையின் மூலம், சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம், SS15 சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தம் 426 எலி உடல்களைச் சேகரித்தது.
முன்னதாக, நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் எலி விஷம் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்தே இந்த எலி உடல்களைச் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.

இந்த நடவடிக்கையில் சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் நகர் மன்ற உறுப்பினர் சியா இயூ கென் (Chia Yew Ken) மற்றும் மன்றத்தின் மக்கள் பிரதிநிதித்துவக் குழுவின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
SS15 பகுதியில் உள்ள பொதுமக்களின் நல்வாழ்வையும் ஆரோக்கியத்தையும் தொடர்ந்து பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, தூய்மையைப் பேணும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்றும் சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் தெரிவித்தது.




