இவ்வாண்டு 68,000 பேர் வேலை இழப்பு : உற்பத்தி, சில்லறை வர்த்தகத் துறைகளில் பாதிப்பு

18 செப்டெம்பர் 2026, 2:35 PM
இவ்வாண்டு 68,000 பேர்  வேலை இழப்பு :  உற்பத்தி, சில்லறை வர்த்தகத் துறைகளில்  பாதிப்பு

பெட்டாலிங் ஜெயா, செப் 18 - இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை மொத்தம் 68,177 தொழிலாளர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.

இது கடந்தாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 15,196 பேர் அதிகரிப்பு என்று பொருளாதார அமைச்சர் அக்மால் நசீர் தெரிவித்தார்.

உற்பத்தித் துறை, மற்றும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகள் இந்த வேலை இழப்புகளால் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் அடங்கும் என்று அக்மால் கூறினார்து

இருப்பினும், ஒட்டுமொத்த தொழிலாளர் சந்தை வலுவாக இருப்பதாகவும், ஜூலை நிலவரப்படி வேலையின்மை விகிதம் 3% ஆக மாறாமல் நீடிப்பதாகவும் அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற தேசிய பொருளாதார நடவடிக்கை மன்ற கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்மால், சமூக பாதுகாப்பு அமைப்பு (Perkeso), வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டம் (EIS) மற்றும் MYFutureJobs ஆகியவற்றின் மூலம் இக்காலகட்டத்தில் 143,653 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க உதவியுள்ளது என்றார்.

"அரசின் இந்த தலையீடு தற்காலிக ஆதரவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பவும் உதவுகிறது என்பதை இது காட்டுகிறது," என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.