நஜிப்பின் நிபந்தனை பொது மன்னிப்பு பேரரசரின் அதிகாரத்துக்கு உட்பட்டது: ஃபாஹ்மி

18 செப்டெம்பர் 2026, 12:08 PM
நஜிப்பின் நிபந்தனை பொது மன்னிப்பு பேரரசரின் அதிகாரத்துக்கு உட்பட்டது: ஃபாஹ்மி

கோலாலம்பூர், செப் 18 - முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நிபந்தனையுடனான பொது மன்னிப்பு வழங்கிய முடிவு மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என தகவல் தொடர்பு அமைச்சரும், மடாணி (Madani) அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

சட்டரீதியான தாக்கங்கள், நாட்டின் நிலைத்தன்மை, சட்ட ஆட்சியின் கொள்கைகள் குறித்து அரசாங்கம், குறிப்பாகப் பிரதமரும் அரசு தலைமை வழக்கறிஞரும் ஆலோசனை வழங்கியதாக அவர் கூறினார்.

"கூட்டரசு அரசியலமைப்பின் 42-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு வழங்குதல், தண்டனையைக் குறைத்தல் மற்றும் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் ஆகிய அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரரசர் எடுத்த முடிவினை அரசாங்கம் கவனத்தில் கொள்கிறது.

டத்தோ ஸ்ரீ நஜிப்பிற்கு வீட்டுக்காவல் மற்றும் 5 கோடி ரிங்கிட் அபராதம் உள்ளிட்ட நிபந்தனையுடனான பொது மன்னிப்பை வழங்குவது பேரரசரின் அதிகார வரம்பிற்குள் அடங்கும்," என்று அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மேலும், ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்ற உறுதியையும் ஃபஹ்மி அளித்தார்.

"டத்தோ ஸ்ரீ நஜிப் சம்பந்தப்பட்ட தற்போது நிலுவையில் உள்ள வழக்குகள் உட்பட, அனைத்து ஊழல் வழக்குகளும் சட்டத்தின்படி தொடர்ந்து கையாளப்படும்," என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.