சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் பறிமுதல்: இரு மலேசியர்கள் கைது

18 செப்டெம்பர் 2026, 10:18 AM
சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் பறிமுதல்:  இரு மலேசியர்கள் கைது

சிங்கப்பூர், செப் 19 : சிங்கப்பூர் துவாஸ் சோதனைச் சாவடியில், 10 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா போதைப் பொருளைக் கடத்த முயன்ற இரு மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் மறைத்து 2 லட்சத்து 3,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள கஞ்சாவை அவர்கள் சிங்கப்பூருக்குள் கடத்த முயன்றதாக அக்குடியரசின் குடிநுழைவு -சோதனைச்சாவடி அதிகாரத்துவ தரப்பு (ICA) தெரிவித்தது.

ICA-வின் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்திற்கு கிடைத்த தகவலை வைத்து, செப்டம்பர் 15 -ஆம் தேதி, மலேசியாவில் பதிவு பெற்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அந்த மோட்டார் சைக்கிளில் 36 வயது வயது ஆடவரும், 35 வயது பெண்ணும் பயணித்திருந்தனர்.

மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட அதிகாரிகள், மோட்டார் சைக்கிள் இருக்கையின் அடியில் 4 பொட்டலங்களில் தாரவப் பொருட்கள் இருந்ததைக் கண்டெடுத்தனர்.

அதன் பின்னர் மத்திய போதைப் பொருள் பிரிவைத் தொடர்பு கொண்டதில் , அப்பிரிவினர் மோட்டார் சைக்கிள் கைப்பிடியில் இருந்த கருப்பு தோள் பையில் 6 பொட்டலங்களில் உலர்ந்த தாவரப் பொருட்கள் இருந்ததைக் கண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த தாவரப் பொருட்கள் கஞ்சா போதைப் பொருள் என உறுதிச் செய்யப்பட்டது.

1973 போதைப் பொருள் ஒழிப்பு சட்டத்தின் கீழ் 500 கிராமுக்கும் அதிகமான போதைப் பொருளை சிங்கப்பூரிலிருந்து ஏற்றுமதியோ இறக்குமதியோ செய்யும் நபருக்கு எதிராக மரண தண்டனை விதிக்க முடியும்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.