மாணவி கொலை வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தாய் வலியுறுத்து

17 செப்டெம்பர் 2026, 9:28 AM
மாணவி கொலை வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தாய் வலியுறுத்து

ஷா ஆலாம், செப் 17 : கடந்தாண்டு பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு பள்ளியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட மாணவியான யாப் ஷிங் சுவெனின் (Yap Shing Xuen) தாயார், இந்த வழக்கின் குற்றவாளிக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு, சட்டத்துறை அலுவலகத்தை வலியுறுத்தும் இணைய மனுவிற்கு (Petition) ஆதரவு தெரிவித்துள்ளார்.

தங்களது குடும்பத்தினர் நீதிமன்றத் தீர்ப்பையும் சட்ட நடைமுறைகளையும் மதிப்பதாகவும், ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பாக தங்களுக்குச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருப்பதாக உணர்வதாகவும், உயிரிழந்த மாணவியின் தாயார் வோங் லீ பிங் (Wong Lee Ping) தெரிவித்தார்.

"நாங்கள் நீதிபதிகளோ அல்லது அரசுத் தரப்பு வழக்கறிஞர்களோ அல்ல. நாங்கள் ஒரு மகளை இழந்த சாதாரண குடும்பம் மட்டுமே.

"சட்ட நடைமுறைகளுக்கு உரிய பரிசீலனை வழங்கப்படும் என்றும், அனுமதி இருந்தால் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை உட்பட, மகளை இழந்த ஒரு தாயின் குரல் கேட்கப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நலன்களில் அக்கறை கொண்ட பொதுமக்கள் இந்த இணைய மனுவிற்கு ஆதரவளிக்குமாறு வோங் அழைப்பு விடுத்தார்.

மேலும், குற்றவியல் சட்டம் மற்றும் மேல்முறையீட்டு நடைமுறைகளில் அனுபவம் வாய்ந்த சட்ட வல்லுநர்கள், தங்களது குடும்பத்திற்கு வழிகாட்ட உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், மேல்முறையீடு செய்ய வேண்டுமா என்ற இறுதி முடிவு அரசுத் தரப்பு வழக்கறிஞர்களிடமே உள்ளது என்றும், அது சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டது என்றும் அவர் கூறினார்.

பொதுமக்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டு, தங்களது கருத்துக்களை தேசிய சட்டத் துறையின் பொதுப் புகார் அமைப்பின் மூலம் சமர்ப்பிக்குமாறு அக்குடும்பத்தினர் ஊக்குவித்துள்ளனர்.

16 வயதான ஷிங் சுவென், கடந்த ஆண்டு பள்ளிக் கழிப்பறையில் சக மாணவனால் குத்தப்பட்டதில் உயிரிழந்தார்.

கடந்த திங்கட்கிழமை, ஷா ஆலம் உயர் நீதிமன்றம், 15 வயதுடைய அந்த மாணவனுக்கு ஸ்கிசோஃப்ரினியா ( Schizophrenia) மனநலப் பாதிப்பு இருப்பதாக, மனநல மருத்துவர் சாட்சியமளித்ததைத் தொடர்ந்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அடிப்படையில் அவரை விடுவித்தது.

அதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுவனை சிகிச்சைக்காக பஹாகியா மருத்துவமனையில் (Hospital Bahagia) அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.