பிளஸ் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் திட்டத்துக்கான அனுமதி கடிதம் போலியானது : PMO போலிசில் புகார்

17 செப்டெம்பர் 2026, 8:28 AM
பிளஸ் நெடுஞ்சாலையை  அகலப்படுத்தும் திட்டத்துக்கான அனுமதி கடிதம் போலியானது : PMO போலிசில் புகார்

புத்ராஜெயா, செப் 17 : PLUS நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகளுக்காக, தனியார் நிதியைப் பயன்படுத்தும் (PFI) திட்டப் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறி, 2026 ஜூலை 17 தேதியிட்டு வெளியான கடிதம் போலியானது என பிரதமர் அலுவலகம் (PMO) தெரிவித்தது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அத்தகைய கடிதத்தை ஒருபோதும் வெளியிடவோ அதில் கையெழுத்திடவோ இல்லை என்பதைப் பிரதமர் அலுவலகம் தெளிவுப்படுத்தியது.

அதில் கூறப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் ஒப்புதல்களுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இன்று வெளியிட்ட அறிக்கையில், மறுத்துள்ளது.

"ஆவண மோசடி, பிரதமரின் பெயர் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக, பிரதமர் அலுவலகம் போலிசில் புகார் அளித்துள்ளது.

அந்த போலி கடிதம் தொடர்பில் கண்டறியப்படும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் யாரும் இந்த போலி கடிதத்தை கண்டு ஏமாற வேண்டாம் என்றும், அதனைப் பகிரவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.