புதிய திடலை பாங்கி தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் எதிரே மாற்றுமாறு பரிந்துரை : பாப்பாராய்டு

17 செப்டெம்பர் 2026, 5:47 AM
புதிய  திடலை பாங்கி  தமிழ்ப் பள்ளிக்கூடத்தின்  எதிரே மாற்றுமாறு பரிந்துரை  :  பாப்பாராய்டு

ஷா ஆலாம், செப் 17 - பாங்கி ஆரம்ப தமிழ்ப் பள்ளிக்கூட மாணவர்க்ளின் விளையாட்டு வசதிக்காக, காஜாங் நகராண்மைக் கழகம் அனுமதித்த பொதுத் திடலுக்கான இடத்தை, அப்பள்ளிக்கூடத்தின் முன்புறத்திற்கு மாற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எளிதில் அணுகக் கூடிய ஓரிடத்தை விளையாட்டுத் திடலுக்கு ஒதுக்குமாறு பெற்றோர் முன் வைத்த கோரிக்கையை அடுத்து, அந்தப் பரிந்துரை முன் வைக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.

" மேம்பாட்டுக்காக, நகராண்மைக் கழகம் அனுமதித்த திடல் பள்ளிக்கூடத்திலிருந்து அதிக தூரத்தில் உள்ளது. அதையடுத்து புதிய திடலுக்கான மேம்பாட்டினைப் பள்ளியின் முன்புறத்தில் இருக்கும் இடத்தில் மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்திருக்கிறோம்" என பாப்பாராய்டு கூறினார்.

இந்த புதிய திடலுக்கானப் பரிந்துரை, கூடுதல் நிலப் பரப்பளவைக் கோரவில்லை. மாறாக புதிய இடத்தையே ஒதுக்குமாறும் கேட்டிருக்கிறோம் " எனவும் அவர் கூறினார்.

மேலும், அந்தப் புதிய திடலை பள்ளி நாட்களில் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். பள்ளி நடவடிக்கை இல்லாத நாட்களில் அங்குள்ள உள்ளூர் மக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றாரவர்.

ஷா ஆலாம், செக்க்ஷன் 18-இல் இதே அணுகுமுறை பயன்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அண்மையில், பாப்பாராய்டு, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பாங்கி தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் நில அந்தஸ்து குறித்து சந்திப்பு நடத்தினார்.

படம்: பாப்பாராய்டு பேஸ்புக்

இவ்வேளையில், பரிந்துரைக்கப்பட்ட புதிய திடலுக்கான இடமாற்றம் இன்னும் மேம்பாட்டாளர்களின் அனுமதியைப் பெற வேண்டியுள்ளது. எனவே, அவ்விவகாரத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்குமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.