BUDI டீசல் தகுதி இனி குடும்ப உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்களுக்கும் மாற்றலாம்

17 செப்டெம்பர் 2026, 1:00 AM
BUDI டீசல் தகுதி இனி குடும்ப உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்களுக்கும் மாற்றலாம்

கூச்சிங், செப் 19 : BUDI டீசல் பெற தகுதியுடைய தனிநபர்கள் , இனி அத்தகுதியை குடும்ப உறுப்பினர்களை அடுத்து மற்றவர்களுக்கும் மாற்றலாம்.

இந்த தகுதி மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

தகுதியுடைய ஓட்டுநர்கள் இனி இந்த திட்டத்தின் தகுதியை BUDI95 திட்டத்தின் பலன்களைப் பெறும் எந்தவொரு மலேசியருக்கும் மாற்றலாம் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இதற்கு முன்பு,அரசாங்க உதவித் தொகை பெற்ற் இந்த BUDI டீசல் தகுதியை நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்குள் மட்டுமே மாற்ற அனுமதிக்கப்பட்டது.

இனி, ஒன்றுக்கும் மேற்பட்ட டீசல் வாகனங்களை வைத்திருக்கும் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள், தங்களது BUDI டீசல் தகுதியை மூன்று வாகனங்கள் வரை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவதாக நிதி அமைச்சருமான அன்வார் அறிவித்தார்.

நேற்றிரவு சரவாக்,கூச்சிங்கில் நடைபெற்ற மலேசிய தின கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது அவர் இந்த அறிவிப்பைச் செய்தார்.

தகுதி மாற்றத்திற்கான விண்ணப்பங்களை BUDI Madani இணையதளம் வழியாக மேற்கொள்ளலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.